Friday, February 25, 2011

மைக்ரோசொப்டும் நோக்கியாவும் புதியமுடிவு.


கணினி மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் மைக்ரோசொப்டும்,  தொலைபேசி துறையில் முன்னணி வகிக்கும் நோக்கியாவும் அண்மையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. அதாவது இனிவரும் காலங்களில் மைக்ரோசொப்டின் விண்டோஸ் மொபைல் ஒபெரடிங் சிஸ்டம் நோக்கியா கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும்.அத்தோடு மைக்ரோசொப்டின் தேடு தளமான Bing Search Engine நோக்கியாவின் தேடு தளமாக காணப்படும். அதேபோல நோக்கியா நிறுவனத்தின் வரைபட சேவையை Nokia Maps மைக்ரோசாப்ட் நிறுவனம் பயன்படுத்துகிறது.

நோக்கியா நிறுவனம் இதுவரை அதன் தயாரிப்புகளில்ஜாவா, சிம்பியன் மற்றும் மீகோ ஒபெரடிங் சிஸ்டம்களையே பாவித்து வருகின்றதுஇந்த ஒப்பந்தத்தின் பின்னர் விண்டோஸ் ஒபெரடிங் சிஸ்டம் தான் வர போகின்றது. இன்றைய உலகில் ஸ்மார்ட் போன்களின் பாவனை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அதிகமான ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனமாக நோகியாவே காணப்படுகிறது. இதனால் இக்கூட்டநியானது தொழிநுட்ப உலகில் பல பரிமாணங்களை தருவிக்கும் என எதிர்பார்க்கலாம். அதன் பின்னர் ஸ்மார்ட் போன்களை இலகுவாக கையாளும் எளிய முறைகள் வந்து விடும். அத்தோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் அப்ளிகேசன், ஈமெயில் பயன்பாடு, கான்பரென்ஸ் (conference), உடனடி செய்தி சேவை (Instant Message System), ஆடியோ - வீடியோ வசதிகள் (Music System) ஆகியன விண்டோஸ் கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்த பட்டதை போன்று நோக்கியாவிலும் பயன்படுத்தப்படும். பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் தொழிநுட்ப வசதிகள் தரமானதும் பாவனையாளர்களுக்கு ஏற்றவகையில் எளியமுறையில் அமைந்திருப்பதும் நாம் அறிந்ததே. எனவே நோக்கியா கையடக்க ஸ்மார்ட் தொலைபேசிகளின் பாவனையும், அதன் உற்பத்தியும் வெகுவாக அதிகரிக்க போகின்றன. 

உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் விண்டோஸ் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கு இவை பெரும் போட்டியாகவும் இருந்து வருகின்றன.அத்தோடு நோக்கியா நிறுவனத்தின் வரைபட சேவையை (Maps Service) தனது தேடுதளத்தில் பயன்படுத்த போகின்றது மைக்ரோசாப்ட் நிறுவனம் 
பலர் நோக்கியா போன்களை பயன்படுத்திகின்றனார்.
எனவே இனிவரும் காலங்களில் மொபைல் ஒபரேடிங் சிஸ்டம்களுக்கிடையில் பல்வேறு மாற்றம் அடையும்.

2 comments: