Saturday, November 27, 2010

தகவல் சாதனங்களின் வளர்ச்சி பாதை.....

மனிதர்களுக்கு இடையேயான தொடர்பாடல்களில் முக்கியத்துவம் உணரப் பட்ட போது அதற்கு ஏற்ப பாதுகாப்பு பிரிவினர் மட்டும் பயன்படுத்திய சாதாரண ரேடியோ சிஸ்டம்ஸ் களில் ஆரமித்து இன்று பள்ளி செல்லும் குழந்தை கையில் கூட ஸ்மார்ட் போன் ஒன்று இருக்கும் அளவுக்கு மொபைல் கருவிகளின் தொழில்நுட்பம், பயன்பாடு வர்ந்த்துள்ளது.இதன் வளர்ச்சி பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது பாவனைக்கு வந்த தொலைத்தொடர்பு கருவிகளதும் ,தொழில்நுட்பங்களும் அவை அறிமுகமான ஆண்டும்.1907

 • முதலாவது Wireless Telephone System உருவானது

1930
 • முதல் Motrola Brand car Radio தயாரிக்கப்பட்டது

 1931 

 • கனேடியரால் Walkie -Talkie கண்டுபிடிக்கப்பட்டது

 
1936
 • போலீசாருக்கான Police Crusier Radio Receiver உருவானது

 
1940
 • எடுத்து செல்லப்படக்கூடிய Handi -Talkie ரேடியோ

1943
 • முதலாவது எடுத்து செல்லக்கூடிய FM Two -Way Radio

1947
 • Citezen 's Band Radio , Car Radiotelephone

1947
 • Transistor (கொள்ளளவி) கண்டுபிடிக்கப்பட்டது

1949
 • Pager (beeper ) உருவாக்கப்பட்டது

1954
 • முதலாவது எடுத்து செல்லக்கூடிய ரேடியோ

1956
 • கார் மொபைல் போன் சிஸ்டம்

 

1958
 • கம்ப்யூட்டர் சிப் (IC ) உருவானது

 


1966
 • Cordless தொலைபேசி உருவானது

 
1972
 • இன்டெல் இன் முதலாவது மைக்ரோ Processor

 

1973
 • முதலாவது தொலைபேசி பாவனைக்கு வந்தது

1983
 • முதலாவது எடுத்துசெல்லக்கூடிய கமெர்சியல் செல்போன்

 1991
 • உலகின் முதலாவது GSM செலூலர் போன்

 1993
 • SMS பயன்படுத்தப்பட்ட்டது (தற்செயல் நிகழ்வு)

1994
 • Bluetooth டெக்னாலஜி உருவாக்கப்படாது

1995
 • முதலாவது இரு வழி பேஜர் உருவானது

 1998
 • Nokia 2110
 • முதலாவது Color Palm -Size PC

 


2000
 • முதலாவது GPRS செலூலர் சிஸ்டம்

2002
 • Blackberry5810 சந்தைக்கு வந்தது

2003
 • Motrolla இன் A600 செல்லுலர் போன்

2004
 • மைக்ரோசொப்ட் இன் முதலாவது மியூசிக் போன்

2005
 • Maicrosoft 3G போன்

2006
 • Microft Windows 5 .0 Smartphone
 • Motrola வின் Ming Smartphone
போன்றன பாவனைக்கு வந்தது

2007
 • iPod Touch
 • Apple இன் iPhone
 • Android OS
 • Wi -Max
 • Amzon Kindle (Wirless Reading Device )
போன்றன இவ்வாண்டு அறிமுகமாகின

2008
 • முதலாவது Androd Phone
 • HTC Dream
 • iPhone 3G
 • iPhone இக்கான SKD
என்பன இவ்வாண்டில் அறிமுகமாகின

 2009
 • Nokia 900 அறிமுகமானது

 


2010

 • iPad ,IPhone 4 , BlackBerry Play Book
 • Nokia n8 அறிமுகமானது
2011 ஆண்டு மொபைல் போன் குறிப்பிட அளவுக்கு மற்றங்கள் அடையும் என்று எதிர்பார்ப்பு......

Friday, November 26, 2010

நம்ப முடியவில்லை இந்தியா வில் 500 ரூபாய்க்கு கம்ப்யூட்டர்...இந்தியா வில் டுத்ஆண்டு வெளிருகிது 500 ரூபாய்க்கு கம்ப்யூட்டர்..

அந்த வீடியோ கீழ பாருங்கோ …
இப்ப ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வித்துட்டு அப்புறம் இதோட விலைய படி படியா கொறைச்சி ஐநூறு ரூபாய்க்கு கொண்டு வர போறாங்களாம் … இதோட சிறப்பம்சம் என்னனா.
 • 2GB Ram
 • Hard Disk கெடையாது
 • Memory Card  போட்டுக்கலாம்
 • Wi-fi இன்டர்நெட் சப்போர்ட் பண்ணும்
 • டச் ஸ்க்ரீன்
 • Linux Operating System
 • பிரவுஸ் பண்ணலாம்
 • படம் பார்க்கலாம்
 • பாட்டு கேட்கலாம்
 • டாகுமெண்ட் பார்க்கலாம்
 • இன்னும் நெறைய …
இத தயார் பண்ணுறதுக்கு கம்பெனிகளோட  ஆதரவ அரசாங்கம் கேட்டிருக்கு ..
அதுக்குள்ள … தைவான்ல ஒரு கம்பனி கேட்டிருக்காஹோ
அமெரிக்கால இன்டெல் கேட்டிருக்காஹோ ..
இன்னும் என்னென எல்லாம் நடக்க போகுதோ .. இந்தியால இருக்குற எல்லா மாணவர்களுக்கும் தகவல் தொழில் நுட்பம் போய் சேருவதற்கு இது ஒரு ஆரம்ப கட்டம் ன்னு சொல்லலாம்  :)
ஜெய் ஹோ !! ஜெய் ஹோ !! :D
அப்புறம் மக்கா…  அவசர பட்டு இத விலை குடுத்து வாங்கிராதிங்க … 2011 பொது தேர்தல்ல அய்யா நம்ப எல்லாருக்கும் இத அறவே இலவசமா குடுத்தாலும் குடுப்பாரு ;) ;)

பிஎஸ்என்எல் 3ஜி வசதி வந்தசு....

 3 ஜி வசதி இருக்கும் பிஎஸ்என்எல்!

தொலைத் தொடர்புத் துறையில் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு இல்லாத வசதிகளோ, நவீன எந்திரங்களோ கிடையாது. ஆனால் இன்னும் கூட தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் பின் தங்கி, மிக மோசமான மொபைல் சேவை, வாடிக்கையாளர் சேவைக்கு விருது வாங்கும் நிலையில்தான் இந்த மாபெரும் நிறுவனம் இயங்கி வருகிறது.

3ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான செல்போன் வசதியை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மிக மோசமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 இதுவே தனியார் துறையாக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் பாதியை ஏலத்தில் விட்டிருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு நவீன வசதி இருக்கிறது என்பதே வெளியில் தெரியாத அளவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுப் பார்த்துக் கொள்கிறது பிஎஸ்என்எல்!இப்போது இந்த 3 ஜி வசதியை 1000 நகரங்களுக்கு விரிவுபடுத்தப் போகிறதாம் பிஎஸ்என்எல். இந்த ஆயிரம் நகரங்களுக்கும் சேர்த்து 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டும் அடுத்த 3 மாதங்களுக்குள் சேர்க்கப் போகிறார்களாம் (இலக்கைக் கூட உயர்ந்த அளவு நிர்ணயிக்கிறார்களா பாருங்கள்!).

3ஜி சேவையில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் மொபைலில் பெற முடியும். குறிப்பாக, வீடியோ சாட்டிங், கேம்ஸ், அதிவேக இன்டர்நெட் வசதி, தொலைக்காட்சி பார்க்கும் வசதி… இப்படி எல்லாமே உண்டு. இதை முறைப்படி விளம்பரப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்தால், இந்தியாவில் பல கோடி சந்தாரர்கள் பிஎஸ்என்எல்லைத் தேடி வருவார்கள்.

ரிலையன்ஸ் கமியூனிக்கேசன் நிறுவனங்கள் அடுத்த முயற்சி. ரிலையன்ஸ் கமியூனிக்கேசன் நிறுவனங்கள் அடுத்த முயற்சி.

3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது.
சாதரணமாக 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200
KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும். இதனால் தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப என நாம் எங்கும் சென்றுகொண்டிருக்கும் போதே செய்ய இயலும்.

சரி இவ்வளவு அம்சங்களுடன் இருக்கிறதே ஏன் அனைத்து நாடுகளிலும் அதிகம் பிரபலமாகவில்லை என்றால்.

3G வசதி ஏற்படுத்த அதெற்கென்று காப்புரிமைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்

அதிக மின்காந்த அலைகள் ஏற்படுத்துவதால், உடல்நலக்கோளாறு ஏற்படலாம் என்ற அச்சம்

3G வசதியை பயன்படுத்துபவர் அதிக கட்டணம் செலுத்த வேண்டும்

புதிய தொழில் நுட்பம் என்பதால் அனைவரையும் சென்றடைய அதிக காலம் எடுக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் 3G வசதி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்த வசதியை ஏற்படுத்த பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் கமியூனிக்கேசன் நிறுவனங்கள் முயற்சிகளில் இறங்கிஉள்ளன.

இது 3G திறன் கொண்ட மொபைல் போன்
2 மெகாபிக்சல் கொண்ட கேமரா
அதிவேக இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் திறன்
மெயின் மெனுவில் யூடியூப்-க்கென்று தனி ஐகான். அதை கிளிக் செய்து வீடியோ படங்களை இணையம் மூலம் பார்க்கமுடியும்.
மிக அகலமான திரை மூலமாக வீடியோப்படங்களை தெளிவாக காணும் வசதி
மட மட வென அதிவேக இணையம்.
விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
Pdf கோப்புகளை படிக்க முடிகின்றது.
Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.

கேமரா உதவியால் நல்ல துல்லிபமான டிஜிட்டல் படங்களை எடுக்கமுடிகின்றது.அப்படியே ஆன் த ஸ்பாட்டில் மின்னஞ்சலும் செய்துவிடலாம்.இந்த சூழ்நிலையில் 3G வசதியை ஏர்டெல் முதன்முதலில் தர துவங்கினால் கட்டனதிட்டங்கள் அனைத்தும் மிகவும் மலிவாகவும் , அனைத்து தரப்பினர்க்கும் ஏற்றதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  

சிம்கார்டு வாங்கப்போகிறீர்களோ..இன்று நம் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ? கட்டாயம் மொபைல் போன் ஒன்று இருக்கும் . அது ப்ரிபைடு அல்லது போஸ்ட் பெய்ட்  சிம்கார்டு மொபைல் போன் இணைவேண்டும். எதுவாக இருந்தாலும் மொபைல் இன்று அத்தியாவசியமாகி விட்டது. ஆனால் புதியதாய் மொபைல் இணைப்பு வாங்க விரும்புபவர்களை மொய்த்திடும் விளம்பரங்களும் விற்பனை பிரதிநிதிகளும் வாடிக்கையாளர்களை ஏதோ ஏதோ சொல்லிக் குழப்பத்தான் செய்கின்றனர் என்பது ஒரு குறை. இவர்களுக்கு உதவிட பொதுவான சில வழிகாட்டுதல்கள் இங்கு தருகிறேன் . 
இங்கு தருகிறேன் .

இந்தியாவில் மொபைல் பயன்பாடு இயங்கும் 23  மண்டலத்திலும் ஐந்து முதல் பத்து  நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.
ஒவ்வொரு நிறுவனமும் ப்ரிபைடு மற்றும்  போஸ்ட் பெய்ட்  கட்டண முறையில்  பத்துக்கும் மேற்பட்ட  சேவைத் திட்டங்களை வழங்குகின்றன. தமிழ் நாட்டில்  ஏர்செல் , ஏர்டெல், வோடபோன் , பி.எஸ்.என்.எல், ஐடியா , வீடியோ கான் , யூனினார் , வெர்ஜின்,  எம் டி எஸ் , ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.

முதல் எட்டு நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். வகை இணைப்பினையும் அடுத்த மூன்று  நிறுவனங்கள் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினையும் தருகின்றன. இவற்றில்  ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இரண்டு வகையான இணைபயனையும் வழங்கி வருகின்றன.
 குறைந்த மாதக் கட்டணத்தில் உள்ள ஒரு இணைப்பினை வாங்கி பின் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதனைக் கணக்கிட்டால் போஸ்ட் பெய்ட் இணைப்பினைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். போஸ்ட் பெய்ட் கட்டண திட்டத்திலும் நெறைய நன்மைகள் உள்ளன. 
பிரீ பெய்ட் கார்டில் குறிப்பிட்ட அளவிற்கான பணத்திற்கு பேசலாம் என்றாலும் இதற்கான கால அளவு இருக்கும். அதற்குள் பேசாவிட்டால் மீதமுள்ள பணம் கேள்விக் குறியாகிவிடும். நீங்கள் உடனே ரீசார்ஜ் கார்ட் மூலம் புதுப்பித்தால் ஏற்கனவே மீதம் உள்ள பணம் இதில் சேர்ந்துவிடும். இல்லை என்றால் பணம் வீண். ரீசார்ஜ் கூப்பன்களிலும் வேறுபாடு உண்டு. ஒரு சில நிறுவனங்கள் சில வேளைகளில் கார்ட் வேல்யூ முழுவதும் அல்லது சற்று கூடுதலான அளவிற்கு மதிப்பு வழங்குவார்கள்.
 
இணைப்பு வாங்கச் செல்கையில் உங்கள் முகவரி, போட்டோ அடையாள அட்டை கேட்பார்கள். போட்டோ ஒன்றும் விண்ணப்பத்துடன் இணைக்கச் சொல்வார்கள். உண்மையான முகவரி, உங்கள் போட்டோ கொடுத்து கார்டை வாங்கிச் சரியான நோக்கத்திற்குப் பயன்படுத்தி தொழில் நுட்பத்தை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் அடுத்தவருக்கு உதவுவதற்கும் பயன்படுத்துங்கள்.

Thursday, November 25, 2010

3 G - வசதி ஏர்டெல் அறிமுகப்படுத்துகிறது ..!

  
இந்திய தொடர்புத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்த போகும் 3G தொழில் நுட்ப வசதியை தர , இந்தியாவில் இத்துறையில் முன்னணியில் உள்ள 7 கம்பனிகள் தயாராகி வருவது உங்களுக்கு தெரிந்ததே . இந்த வசதியின் நன்மைகளை உணர்ந்தவர்கள் 3G எப்போ வரும் ? எப்போ வரும் ? என்று ஏங்கி கொண்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில் , வரும் தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் அனைவரும் 3G வசதியுடன் கொண்டாடத் தயாராகுங்கள் என்று ஏர்டெல், தனது விளம்பரத்தை துவக்கியுள்ளது .   3G வசதியை வழங்க ஏர்செல், ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் , ஐடியா , எஸ் டேல், டாட்டா டோகோமோ ஆகிய கம்பனிகள் தான் அனுமதி பெறப்பட்டன .

மற்ற கம்பனிகள் எல்லாம் 3G சேவையைப்பற்றி கருத்து தெரிவிக்காத நிலையில் , டாட்டா டோகோமோ மட்டும் தான் வரும் தீபாவளிக்குள் இந்த வசதியை இந்தியாமுழுவதும் தர தயாராகி வருகிறது. அப்படி வழங்க ஆரம்பித்து விட்டால் இந்தியாவில் , அரசுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு அடுத்தபடியாக , தனியார் துறையில் இந்த வசதியை வழங்கும் முதல் கம்பெனி என்ற பெயர் கிடைக்கும். 
 
ஏர்டெல் லின் இது ஒன்னும் புதிதல்ல .... ஏனென்றால் "ஏர்டெல் " தான் உலகிலேயே முதன்முதலில் 3G  வசதி மற்றும் 4.5 G வசதியை வழங்கிய கம்பனியாகும். அதுமட்டும் அல்ல இந்தியாவில் அனைத்து கம்பனிகளும் ஒரு நிமிட கட்டனத்திட்டதில் இருந்த நிலையில்ன் ஏர்டெல்தான் ஒரு வினாடி கட்டனத்திட்டதை அறிமுகப்படுத்தி நாட்டிலேயே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தான் அனைத்து கம்பனிகளும் ஒரு வினாடி கட்டனத்திற்கு மாறின. 

 இந்த சூழ்நிலையில் 3G வசதியை ஏர்டெல் முதன்முதலில் தர துவங்கினால் கட்டனதிட்டங்கள் அனைத்தும் மிகவும் மலிவாகவும் , அனைத்து தரப்பினர்க்கும் ஏற்றதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.