இந்திய தொடர்புத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்த போகும் 3G தொழில் நுட்ப வசதியை தர , இந்தியாவில் இத்துறையில் முன்னணியில் உள்ள 7 கம்பனிகள் தயாராகி வருவது உங்களுக்கு தெரிந்ததே . இந்த வசதியின் நன்மைகளை உணர்ந்தவர்கள் 3G எப்போ வரும் ? எப்போ வரும் ? என்று ஏங்கி கொண்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில் , வரும் தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் அனைவரும் 3G வசதியுடன் கொண்டாடத் தயாராகுங்கள் என்று ஏர்டெல், தனது விளம்பரத்தை துவக்கியுள்ளது .
3G வசதியை வழங்க ஏர்செல், ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் , ஐடியா , எஸ் டேல், டாட்டா டோகோமோ ஆகிய கம்பனிகள் தான் அனுமதி பெறப்பட்டன .
மற்ற கம்பனிகள் எல்லாம் 3G சேவையைப்பற்றி கருத்து தெரிவிக்காத நிலையில் , டாட்டா டோகோமோ மட்டும் தான் வரும் தீபாவளிக்குள் இந்த வசதியை இந்தியாமுழுவதும் தர தயாராகி வருகிறது. அப்படி வழங்க ஆரம்பித்து விட்டால் இந்தியாவில் , அரசுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு அடுத்தபடியாக , தனியார் துறையில் இந்த வசதியை வழங்கும் முதல் கம்பெனி என்ற பெயர் கிடைக்கும்.
ஏர்டெல் லின் இது ஒன்னும் புதிதல்ல .... ஏனென்றால் "ஏர்டெல் " தான் உலகிலேயே முதன்முதலில் 3G வசதி மற்றும் 4.5 G வசதியை வழங்கிய கம்பனியாகும். அதுமட்டும் அல்ல இந்தியாவில் அனைத்து கம்பனிகளும் ஒரு நிமிட கட்டனத்திட்டதில் இருந்த நிலையில்ன் ஏர்டெல்தான் ஒரு வினாடி கட்டனத்திட்டதை அறிமுகப்படுத்தி நாட்டிலேயே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தான் அனைத்து கம்பனிகளும் ஒரு வினாடி கட்டனத்திற்கு மாறின.
இந்த சூழ்நிலையில் 3G வசதியை ஏர்டெல் முதன்முதலில் தர துவங்கினால் கட்டனதிட்டங்கள் அனைத்தும் மிகவும் மலிவாகவும் , அனைத்து தரப்பினர்க்கும் ஏற்றதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
No comments:
Post a Comment