Friday, November 26, 2010

பிஎஸ்என்எல் 3ஜி வசதி வந்தசு....

 3 ஜி வசதி இருக்கும் பிஎஸ்என்எல்!

தொலைத் தொடர்புத் துறையில் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு இல்லாத வசதிகளோ, நவீன எந்திரங்களோ கிடையாது. ஆனால் இன்னும் கூட தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் பின் தங்கி, மிக மோசமான மொபைல் சேவை, வாடிக்கையாளர் சேவைக்கு விருது வாங்கும் நிலையில்தான் இந்த மாபெரும் நிறுவனம் இயங்கி வருகிறது.

3ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான செல்போன் வசதியை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மிக மோசமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 இதுவே தனியார் துறையாக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் பாதியை ஏலத்தில் விட்டிருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு நவீன வசதி இருக்கிறது என்பதே வெளியில் தெரியாத அளவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுப் பார்த்துக் கொள்கிறது பிஎஸ்என்எல்!



இப்போது இந்த 3 ஜி வசதியை 1000 நகரங்களுக்கு விரிவுபடுத்தப் போகிறதாம் பிஎஸ்என்எல். இந்த ஆயிரம் நகரங்களுக்கும் சேர்த்து 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டும் அடுத்த 3 மாதங்களுக்குள் சேர்க்கப் போகிறார்களாம் (இலக்கைக் கூட உயர்ந்த அளவு நிர்ணயிக்கிறார்களா பாருங்கள்!).

3ஜி சேவையில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் மொபைலில் பெற முடியும். குறிப்பாக, வீடியோ சாட்டிங், கேம்ஸ், அதிவேக இன்டர்நெட் வசதி, தொலைக்காட்சி பார்க்கும் வசதி… இப்படி எல்லாமே உண்டு. இதை முறைப்படி விளம்பரப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்தால், இந்தியாவில் பல கோடி சந்தாரர்கள் பிஎஸ்என்எல்லைத் தேடி வருவார்கள்.

1 comment: