Friday, November 26, 2010

சிம்கார்டு வாங்கப்போகிறீர்களோ..







இன்று நம் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ? கட்டாயம் மொபைல் போன் ஒன்று இருக்கும் . அது ப்ரிபைடு அல்லது போஸ்ட் பெய்ட்  சிம்கார்டு மொபைல் போன் இணைவேண்டும். எதுவாக இருந்தாலும் மொபைல் இன்று அத்தியாவசியமாகி விட்டது. ஆனால் புதியதாய் மொபைல் இணைப்பு வாங்க விரும்புபவர்களை மொய்த்திடும் விளம்பரங்களும் விற்பனை பிரதிநிதிகளும் வாடிக்கையாளர்களை ஏதோ ஏதோ சொல்லிக் குழப்பத்தான் செய்கின்றனர் என்பது ஒரு குறை. இவர்களுக்கு உதவிட பொதுவான சில வழிகாட்டுதல்கள் இங்கு தருகிறேன் . 
இங்கு தருகிறேன் .

இந்தியாவில் மொபைல் பயன்பாடு இயங்கும் 23  மண்டலத்திலும் ஐந்து முதல் பத்து  நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.
ஒவ்வொரு நிறுவனமும் ப்ரிபைடு மற்றும்  போஸ்ட் பெய்ட்  கட்டண முறையில்  பத்துக்கும் மேற்பட்ட  சேவைத் திட்டங்களை வழங்குகின்றன. தமிழ் நாட்டில்  ஏர்செல் , ஏர்டெல், வோடபோன் , பி.எஸ்.என்.எல், ஐடியா , வீடியோ கான் , யூனினார் , வெர்ஜின்,  எம் டி எஸ் , ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.

முதல் எட்டு நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். வகை இணைப்பினையும் அடுத்த மூன்று  நிறுவனங்கள் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினையும் தருகின்றன. இவற்றில்  ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இரண்டு வகையான இணைபயனையும் வழங்கி வருகின்றன.
 குறைந்த மாதக் கட்டணத்தில் உள்ள ஒரு இணைப்பினை வாங்கி பின் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதனைக் கணக்கிட்டால் போஸ்ட் பெய்ட் இணைப்பினைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். போஸ்ட் பெய்ட் கட்டண திட்டத்திலும் நெறைய நன்மைகள் உள்ளன. 
பிரீ பெய்ட் கார்டில் குறிப்பிட்ட அளவிற்கான பணத்திற்கு பேசலாம் என்றாலும் இதற்கான கால அளவு இருக்கும். அதற்குள் பேசாவிட்டால் மீதமுள்ள பணம் கேள்விக் குறியாகிவிடும். நீங்கள் உடனே ரீசார்ஜ் கார்ட் மூலம் புதுப்பித்தால் ஏற்கனவே மீதம் உள்ள பணம் இதில் சேர்ந்துவிடும். இல்லை என்றால் பணம் வீண். ரீசார்ஜ் கூப்பன்களிலும் வேறுபாடு உண்டு. ஒரு சில நிறுவனங்கள் சில வேளைகளில் கார்ட் வேல்யூ முழுவதும் அல்லது சற்று கூடுதலான அளவிற்கு மதிப்பு வழங்குவார்கள்.
 
இணைப்பு வாங்கச் செல்கையில் உங்கள் முகவரி, போட்டோ அடையாள அட்டை கேட்பார்கள். போட்டோ ஒன்றும் விண்ணப்பத்துடன் இணைக்கச் சொல்வார்கள். உண்மையான முகவரி, உங்கள் போட்டோ கொடுத்து கார்டை வாங்கிச் சரியான நோக்கத்திற்குப் பயன்படுத்தி தொழில் நுட்பத்தை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் அடுத்தவருக்கு உதவுவதற்கும் பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment