Wednesday, November 24, 2010

கூகுள் புதிய வசதிகள்

கூகுள் தினந்தோறும் ஏதாவது ஒரு மாற்றத்தை இணைய உலகில் ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது. அவற்றில் சில...

புதிய வடிவில் படங்கள் தேடல் (Image Search)

Google படங்கள் தேடுதலை புதிய முறையில் தர முயற்சி மேற்கொள்கிறது. அதாவது படங்கள் தேடுதலில் போது படங்களை வரிசைப்படுத்தி (Group) தருகிறது. அதன் பின்புலத்தில் உள்ள படத்தை க்ளிக் செய்தால் அதன் வடிவம் வட்டமாகி மொத்த வரிசைப்படுத்தப்பட்ட படங்களும் கண்பிக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு படத்தை க்ளிக் செய்தால் அந்த படம் அனிமேஷனுடன் அழகாக பெரிதாகி வருகிறது. உதாரணமாக tajmahal என்று டைப் செய்தால் படங்கள் நான்கு பிரிவுகளாக உருவாகி, தனி தனி பிரிவுகளாக அனிமேஷனனுடன் வருகிறது.

முகவரி: http://image-swirl.googlelabs.com/


ஆங்கில உச்சரிப்பை தமிழில் படிக்கலாம்

ஒரு வாக்கியத்தையோ அல்லது ஒரு முழு இணையப்பக்கத்தையோ அதே உச்சரிப்புடன் முழுவதுமாக மற்றொரு மொழிக்கு மாற்றலாம். இதன் மூலம் நமது பெயரைக் கூட மற்ற மொழிகளில் எழுத கற்கலாம் அல்லது ஆங்கிலத்தில் உள்ள இணையப்பக்கத்தை தமிழில் மாற்றி சுலபமாக படிக்கலாம். உதாரணமாக இதில் ”tamil ulagam” என்ற டைப் செய்தால் ”தமிழ் உலகம்” என மாற்றித் தரும். இணைய முகவரியை (உதாரணமாக www.msn.com) கொடுத்து தமிழை தேர்தெடுத்தால் அதன் முழு பக்கத்தை தமிழ் உச்சரிப்புக்கு மாற்றித்தரும்.

முகவரி: http://scriptconv.googlelabs.com/

முற்காலத்தில் வந்த செய்திதாள்களை படிக்கலாம்

இந்த வசதி மூலம் பழைய செய்திதாள்களில் வந்த செய்திகளை குறிச்சொற்கள் மூலமாகவோ, தேதி வாரியாகவோ காணலாம். உதாரணமாக, independence என்று டைப் செய்து இந்திய சுதந்திர நாளான August 15, 1985 என்று Date: பட்டியில் டைப் செய்தால் அந்தநாளில் வந்த ஆங்கில செய்திதாள்களை வரிசையாக காணலாம்.


முகவரி: http://newstimeline.googlelabs.com/


YouTube-ன் வேகத்தை அதிகப்படுத்தலாம்

YouTube பொதுவாக இணைய வேகம் குறைந்த கணிணியில் மெதுவாக செயல்படும். இதன் வேகத்தை அதிகப்படுத்த இப்போது Google புது வசதியை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் வீடியோவின் தரத்தை (Quality) சிறிது குறைப்பதன் மூலம் வீடியோ வரும் வேகத்தை அதிகப்படுத்தலாம். இதனை செயல்படுத்த,

முகவரி: http://www.youtube.com/feather_beta சென்று Join the "Feather" Beta என்பதை க்ளிக் செய்து வீடியோக்களை தேட தொடங்கலாம்.

செவ்வாய் கோளை ஆராயலாம்

இந்த வசதி மூலம் செவ்வாய் கோளின் மேற்பரப்பை Google Map போல செவ்வாயில் உள்ள பெயரிடப்பட்ட மலைகள், குன்றுகள், அமெரிக்க ஆய்வுக் கருவிகள் இறங்கிய இடங்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், எரிமலைவாய், முக்கிய இடங்கள் என அனைத்தையும் காணலாம். மேலும் அகச்சிவப்பு காட்சியிலும் செவ்வாயை பார்க்கலாம்.

முகவரி: http://www।google.com/mars/

No comments:

Post a Comment