Wednesday, June 29, 2011

Java Mobile Antivirus.


                                               

Java உள்ளடக்கப்பட்ட கைத்தொலைபேசிகளினை வைரஸ் தாக்கத்திலிருந்து தடுப்பதற்கான சிறந்த வைரஸ் தடுப்பு புரோகிராம். கீழே இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
Download Java Mobile Antivirus

தொலைபேசியில் இணைய தளம் பாண்ட்வித்தை அளக்க ஒரு எளிய மென்பொருள்


மொபைல் தொலைபேசியின் அண்மை கால தொழில்நுட்ப வளர்ச்சி மிக அதிகம். தற்போது GPRS மற்றும் 3G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமானதால், சமிபகாலத்தில் மக்கள் மொபைலில் இணைய தளங்களை உபயோகிப்பது அதிகம் ஆகிவிட்டது.

இந்த சேவையை வழங்கிவரும் மொபைல் நிறுவனங்கள், இதன் பயன்பாட்டில் சில குறிபிட்ட அளவுமாட்டும் இலவசமாக வழங்கி வருகிறது அதற்கு பின் உபயோகிக்க படும் பாண்ட்வித் அளவிற்க்கு ஏற்ப பணம் வசூலிக்க படும்.
இந்த அளவை தெரியாமல் பலர் அளவுக்கு அதிகமாக உபயோகித்து விடுவார்கள். இதை கட்டுபடுத்த, நாம் உபயோகிக்கும் பாண்ட்விட்த் அளவை அறிந்து கொல்ல ஒரு எளிய மொபைல் தொலைபேசிக்கு ஆனா மென்பொருள் இதோ.

Data Quota என்ற இந்த சிறய மென்பொருள் பாண்ட்வித்தை கண்காணிக்க சிறந்த வழி. Data Quota ஒரு சிம்பியன்( Symbian ) வகை மொபைல் தொலைபேசிகளுக்கு ஏற்றது. இந்த மென்பொருள் நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது பின்புறத்தில் இயங்ககூடியது. இது வரை படம்  (Graphical ) வடிவில் காட்டகூடியது.


Quota – குறிப்பிட்ட பாண்ட்விட்த் அளவை நீங்கலே
ஒவ்வொரு மாதமும் நிர்ணயத்துகொள்ள முடியும்.
Billing Day – மாத மாதத்திற்கு புதுப்பித்தல் நாளை
நிர்ணயத்துகொடால், குறிபிட்ட காலத்தில் மீதி உள்ள
நாட்களை காட்சியாக அறிவிக்கும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து எடுக்க
இங்கே அழுத்து - Data Quota

Sunday, June 19, 2011

இணையதளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான விளையாட்டுகள் தரவிறக்கும் தளம்




மொபைல்களில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது? ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் தனக்கென ஒரு கடையை வைத்துள்ளது. இவர்களின் இணையதளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.

1. GetJar
மொபைல் பயன்பாடுகளுக்குச் சிறந்த தளமாகும். இணைய உலவிகள், மென்பொருள்கள், விளையாட்டுகள், ஆபிஸ் பயன்பாடுகள், PDF போன்ற பயன்பாடுகளை தலைப்பு வாரியாக வைத்துள்ளார்கள். இதில் ஆப்பிள் ஐபேடுக்கும் கூட மென்பொருள்களைப் பெற முடியும். எளிமையான பயன்பாடுகள் முதற்கொண்டு Google map, Google Earth போன்ற அட்வான்ஸ்டு மென்பொருள்களையும் இலவசமாக தரவிறக்கலாம்.
http://getjar.com
2.Mobile9.com
இந்த தளத்தில் சாதாரண மொபைலில் இருந்து எல்லாவகையான மொபைல்க்கும்.பயன்பாடுகளைப் பெற முடியும். இத்தளத்தில் லட்சக்கணக்கான மொபைலுக்கான மென்பொருள்கள் உள்ளன. மேலும் புதிது புதிதாக பயன்பாடுகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொபைலுக்குத் தேவையான Themes, Ringtones, Wallpapers, Videos, Screensavers, Java Softwares, Games என அனைத்துமே ஒரே இடத்தில் இருக்கின்றன. போனின் மாடலைக் குறிப்பிட்டால் போதும் அனைத்து வகையான பயன்பாடுகளும் ஒடிவரும்.
http://mobile9.com
3.Nokia OVI Store
இது நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள் இத்தளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும். இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும். நீங்கள் நோக்கியா மொபைலிலிருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
http://store.ovi.com
4. Android Market
கூகிளின் மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம் இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும் லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன. பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விசயம் நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும். வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது.
http://market.android.com

5. Microsoft Windows Mobile OS
மைக்ரோசாப்டின் மொபைல் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர். ஏனெனில் முழுதும் விண்டொஸ் இருக்கும் கணிணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை நிறுவும் போது கணிணியிலிருந்து தான் மொபைலில் நிறுவ முடியும். சில மென்பொருள்களை கணிணியில் நிறுவி கணிணி வழியாக மொபைல் அமைப்புகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக Registry Editor.
மொபைல் உதாரணங்கள் – Samsung Omnia Series, Sony Ericson Xperia X1
http://marketplace.windowsphone.com
6.Apple Store
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேடு பயன்படுத்துவர்கள் ஆப்பிளின் ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://store.apple.com/us
இதைத் தவிர மற்றவற்றைப் பயன்படுத்தி உள்ளதால் இதைக் கடைசியாக எழுதியுள்ளேன். ஐபோன் ஒன்று கூட சிக்கவில்லை இதுவரை. மற்றவை எல்லாம் நான் பயன்படுத்திப் பார்த்த அனுபவத்தில் குறிப்பிட்டுள்ளேன்.மொபைல் பயன்படுத்துபவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துகளைக் கூறவும்

Friday, June 17, 2011

phonecurry இணையதளங்கள்.

புதிதாக செல்போன் வாங்கச்சென்றால் எந்த மாதிரியை செல்போன் வாங்குவது என்ற குழப்பம் நமக்கு வருவது சகஜம் .அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவன‌ங்கள் அறிமுகமாகி புதிய போன்களை சந்தையில் நிறைத்து வருகின்றன. எனவே புதிதாக போன் வாங்கச்செல்லும் போது எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம்.
இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு பெற பூர்விகாவோ யூனிவர்செலோ தேடி போவதற்கு முன் இண்டெர்நெட்டில் பல்வேறு போன்களை பார்த்து அவற்றின் விலை மற்றும் அம்சங்களை அலசிப்பார்த்து கொள்ளலாம். இதைவிட‌ சுல‌ப‌மான‌ வ‌ழி ஒன்று இருக்கிற‌து.அது நேராக‌ போன்க‌ரி இனைய த‌ள‌த்திற்கு செல்வ‌து தான்.இந்த‌ த‌ள‌ம் உங்களுக்கு ஏற்ற‌ புதிய‌ போன் எது என்று தேர்வு செய்து கொள்ள‌ வ‌ழி காட்டுகிற‌து. இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்த‌தும் உங்க‌ள்: ப‌ட்ஜெட்டை குறிப்பிட்டு விட்டு,போனில் நீங்க‌ள் எதிர்பார்க்கும் அம்ச‌ங்க‌ள் எவை என்ப‌தை குறிப்பிட‌ வேண்டும்.எல்லாவ‌ற்றுக்கும் த‌னித்த‌னி க‌ட்ட‌ங்க‌ள் இருப்ப‌தால் அவ‌ற்றில் இருந்து தேர்வு செய்தாலே போதும்.

                             

ட‌ச் ஸ்கிரீன் தேவையா,மீயூசிக் பிலேய‌ர் தேவையா,கீபோர்டு எப்ப‌டி இருக்க‌ வெண்டும் என்று குறிப்பிட்ட‌ பின் கிளிக் செய்தால் பொருத்த‌மான‌ போனை அடையாள‌ம் காட்டும். அத‌ன் பிற‌கு அந்த‌ குறிப்பிட்ட‌ ர‌க‌ம் ப‌ற்றி ப‌டித்துவிட்டு அதே போன்ற‌ ம‌ற்ற‌ போன்க‌ளோடு அத‌ன் விலையையும் ஒப்பிட்டு பார்த்து எது திருப்ப்தி அளிக்கிற‌தோ அத‌னை தேர்வு செய்ய‌லாம்.
மிக‌வும் எளிமையான‌ நான்கே ப‌டிக‌ளில் பொருத்த‌மான‌ போனை தேர்வு செய்து விட‌லாம் என்று போன்க‌ரி உறுதி அளிக்கிற‌து.

                                     

இணையதள முகவரி சுட்டி
GSM போன்க‌ள் ம‌ட்டுமே இந்த‌ த‌ள‌த்தில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌. CDMA போன்க‌ள் இல்லை. அதே போல‌ இர‌ண்டு ஆண்டுக்கு மேல் ப‌ழ‌மையான‌ போன்க‌ள் இல்லை.அந்த‌ போன்க‌ள் காலாவ‌தியாகி போய் க‌டைக‌ளில் இல்லாத‌ நிலையும் இருக்க‌லாம் என்ப‌தால் இப்ப‌டியாம். நேராக‌ குறிப்பிட்ட‌ ர‌க‌ போன் பெய‌ரை குறிப்பிட்டு அத‌னை ப‌ற்றியும் தெரிந்து கொள்ளூ வ‌ச‌தியும் உள்ள‌து.போன்க‌ளின் ப‌ட்டிய‌லை கிளீக் செய்து அவை பற்றியும் ஆர‌ய்ந்து பார்க்க‌லாம்.
இந்திய‌ நுக‌ர்வோருக்கு செல்போன் வாங்க‌ வ‌ழி காட்டும் நோக்கில் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ இந்த‌ த‌ள‌ம் த‌ன்னைப்ப‌ற்றி குறிபிடுகிற‌து.
ம‌ற்ற‌ போன் த‌ள‌ங்க‌ளை விட‌ எளிமையான‌து.சிற‌ந்த‌தும் கூட‌. நான் ட்ரை பண்ணி பார்த்தேன் நல்லாருக்கு .! நீங்களும் பார்த்துட்டு சொல்லுங்க

Thursday, June 16, 2011

மொபைலுக்கு வரும் அழைப்புக்களை சிறந்த முறையில் பதிவுசெய்யும் மென்பொருள்


மொபைலுக்கு வரும் அழைப்புக்களை சிறந்த முறையில் பதிவுசெய்யும் மென்பொருள் (Best CallRecorder S60v5 SymbianOS9.4)உங்களுக்கு வரும் அழைப்புக்களை அல்லது நீங்கள் அழைக்கும் அழைப்புக்களை பதிவு செய்து மறுபடியும் கேட்பதற்கு Best callrecorder  என்னும் மென்பொருளை பயன்படுத்தலாம்
இணையதள முகவரி சுட்டி
இந்த மென்பொருளை உங்கள் மொபைலில் பயன்படுத்துவது முலமாக உங்கள் மொபைலுக்கு வரும் அழைப்புகளை நீங்கள் பதிவு செய்யும் வசதியை இந்த மென்பொருள் கொண்டு உள்ளது. 

Wednesday, June 15, 2011

மொபைல்களுக்கான biNu Browser.

மொபைல்களுக்கான biNu Browser. இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது.இதன் முக்கியாமான அம்சம் இதன் அசுர வேகம் தான். ஏற்கனெவே சென்னது போல் இது மற்ற உலவிகள் போல் அல்ல இதில் நாம் நம்முடைய இணைய முகவரியை கொடுக்க முடியாது. இருந்தாலும் நமக்கு பொதுவாக தேவைப்படும் அணைத்தும் இதில் முன்கூட்டியே தரப்பட்டிருக்கும். Facebook, Twitter, Wikipedia, news, sports ஆகியவற்றையும் மேலும் நம்ம ஊரின் weatherஐ அறியவும் இதில் வசதி உள்ளது. இது மற்றவற்றை விட பத்துமடங்கு வேகமானது என்று கூறுகின்றனர். மேலும் பல பயன்பாடுகளும் நாளுக்கு நாள் இதில் சேர்க்கப்பட்டுவருகிறது.


இந்த உலவியானது தரவுகளை பரிமாற்றும் போது தகவலானது மிகவும் சுருக்கப்ப்ட்டு பரிமாறிக்கொள்வதால் வேகமாக நமக்கு தேவையான செய்திகளை நாம் காணமுடியும். மேலும் குறைந்த அளவு தரவானது உபயோகப்ப்டுத்தப்படுவதால் பணமும் மிச்சமாகிறது. இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காணமுடியும். இதற்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.
மேலும் முக்கியமாக இதில் மொழிப்பிரச்சினையே கிடையாது. எழுத்துகள் தெளிவாக நம் தாய்மொழியிலேயே அழகாக தெரியும். தமிழில் கூகுள் நியூஸ், தினகரன், தினமலர் மற்றும் பலவற்றை இதில் படிக்கமுடிகிறது. இது மற்ற மொழிகளை கூட ஆதரிக்கிறது.
இதில் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வசதி இலவசமாக smsகளை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். இதில் account ஆரம்பிப்பது மிக மிக சுலபம். உங்களுக்கான பயனர் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் அதனை கொடுத்தால் போதும். நமக்கு உடனே ஒரு பாஸ்கோட் அனுப்புவார்கள். அதனை biNuவில் கொடுத்தால் போதும். நீங்கள் smsகளை அனுப்பலாம்.
இது முற்றிலும் இலவசமான் ஒன்று. அனைத்து மொபைல்களிலும் இருக்க வேண்டிய பயன்பாடு. இதனை தரவிறக்க உங்கள் மொபைலில் m.binu.com செல்லவும்.
அல்லது இதனை பற்றி மேலும் அறிய www.binu.com செல்லவும். நீங்கள் இங்கு சென்றும் தரவிறக்கிக்கொள்ளலாம்.

Tuesday, June 14, 2011

மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS களையும் தடுக்க ஒரு வசதி


நாம் பயன்படுத்தும் செல்போனில் நெறைய வசதிகளை பயன்படுத்தி வருவோம். அதில் முக்கியமான வசதி " Block list Calls " மற்றும் " Block list SMS"  என்ற வசதியாகும். இந்த வசதியின் மூலம் நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுத்து விடமுடியும். இந்த இரண்டு வசதிகளையும் தனி தனி அப்ளிகேசன் மூலமாக தான் பயன் படுத்த முடியும் . 
ஆனால் இப்போது புதிதாக " Killer Mobile  சாப்ட்வேர் " மூலமாக இந்த இரண்டையும் ஒரே அப்ளிகேசனில் நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த புதிய அப்ளிகேசனின் பெயர் " Blackballer " என்பதாகும்.

  
இந்த அப்ளிகேசனின் சிறப்புகள் 
  • நமக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
  • அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரை, கால் வராமல் தடுக்கலாம்.
  • அடிக்கடி நமக்கு வரும் ஒரு நம்பரைஎஸ் எம் எஸ் வராமல் தடுக்கலாம்.
  • குருப் உருவாக்கி,தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.
  • ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் செய்து கொள்ளலாம்.
  • பாஸ் வோர்ட் வசதி செய்து கொள்ளலாம்.
  • அணைத்து வகை மொபைல் களுக்கும் பயன்படக் கூடியது .
  • ( Nokia,Windows Mobile ,Android and Blackberry )
இதில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ள ஒரு வசதி ஸ்பாம் நம்பர்ஸ் அப்டேட்ஸ் வசதியாகும். நாம் எப்போது வேண்டுமானாலும் நமது நாட்டின் ஸ்பாம் நம்பர் களை அப்டேட்ஸ் செய்து நமது மொபைலுக்கு வரும் தேவையில்லாத கால்களையும் , எஸ் எம் எஸ் களையும் தடுக்கலாம்.

இந்த அப்ளிகேசன் " Lite version " மற்றும் " Paid version " என்ற இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. நம் அனைவருக்கும் பயன்படக்கூடிய. 
இந்த அப்ளிகேஷனை இங்கு சென்று டவுன்லோட் செய்யவும்.