Wednesday, June 15, 2011

மொபைல்களுக்கான biNu Browser.

மொபைல்களுக்கான biNu Browser. இது opera mini, ucbrowser, bolt போன்ற உலவிகளை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது.இதன் முக்கியாமான அம்சம் இதன் அசுர வேகம் தான். ஏற்கனெவே சென்னது போல் இது மற்ற உலவிகள் போல் அல்ல இதில் நாம் நம்முடைய இணைய முகவரியை கொடுக்க முடியாது. இருந்தாலும் நமக்கு பொதுவாக தேவைப்படும் அணைத்தும் இதில் முன்கூட்டியே தரப்பட்டிருக்கும். Facebook, Twitter, Wikipedia, news, sports ஆகியவற்றையும் மேலும் நம்ம ஊரின் weatherஐ அறியவும் இதில் வசதி உள்ளது. இது மற்றவற்றை விட பத்துமடங்கு வேகமானது என்று கூறுகின்றனர். மேலும் பல பயன்பாடுகளும் நாளுக்கு நாள் இதில் சேர்க்கப்பட்டுவருகிறது.


இந்த உலவியானது தரவுகளை பரிமாற்றும் போது தகவலானது மிகவும் சுருக்கப்ப்ட்டு பரிமாறிக்கொள்வதால் வேகமாக நமக்கு தேவையான செய்திகளை நாம் காணமுடியும். மேலும் குறைந்த அளவு தரவானது உபயோகப்ப்டுத்தப்படுவதால் பணமும் மிச்சமாகிறது. இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காணமுடியும். இதற்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.
மேலும் முக்கியமாக இதில் மொழிப்பிரச்சினையே கிடையாது. எழுத்துகள் தெளிவாக நம் தாய்மொழியிலேயே அழகாக தெரியும். தமிழில் கூகுள் நியூஸ், தினகரன், தினமலர் மற்றும் பலவற்றை இதில் படிக்கமுடிகிறது. இது மற்ற மொழிகளை கூட ஆதரிக்கிறது.
இதில் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு வசதி இலவசமாக smsகளை நம் நண்பர்களுக்கு அனுப்பமுடியும். இதில் account ஆரம்பிப்பது மிக மிக சுலபம். உங்களுக்கான பயனர் பெயர் மற்றும் உங்கள் மொபைல் எண் அதனை கொடுத்தால் போதும். நமக்கு உடனே ஒரு பாஸ்கோட் அனுப்புவார்கள். அதனை biNuவில் கொடுத்தால் போதும். நீங்கள் smsகளை அனுப்பலாம்.
இது முற்றிலும் இலவசமான் ஒன்று. அனைத்து மொபைல்களிலும் இருக்க வேண்டிய பயன்பாடு. இதனை தரவிறக்க உங்கள் மொபைலில் m.binu.com செல்லவும்.
அல்லது இதனை பற்றி மேலும் அறிய www.binu.com செல்லவும். நீங்கள் இங்கு சென்றும் தரவிறக்கிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment