Sunday, December 26, 2010

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்..

 
 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுச் சலுகையாக ரூ 499-க்கு வரையறையற்ற பிராட்பேண்ட் வசதியை அளிக்கிறது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் பொதுமேலாளர் டி நடராஜன் கூறுகையில், "ஏற்கெனவே ஹோம் 625 என்ற திட்டத்தின் கீழ் வரையறையற்ற பிராட்பேண்ட் வசதி தந்து வருகிறது பிஎஸ்என்எல். இதில் லேண்ட்லைன் போனுக்கு கட்டணம் கிடையாது. 100 இலவச கால்கள் உண்டு.

இப்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகையாக ரூ 499-க்கு பிராட்பேண்ட் இணைப்பு தர முடிவு செய்துள்ளது பிஎஸ்என்எல். இந்த இரு திட்டங்களிலுமே மோடம் பொருத்த கட்டணம் இல்லை. 100 இலவச கால்கள் உண்டு" 

Tuesday, December 21, 2010

ஏர்செல் இண்டர்நெட் கார்டு..



ஏர்செல் இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் சேவை வழங்க, 100 ரூபாய்க்கும் குறைந்த கட்டணத்தில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன.உதாரணமாக, ஏர்செல் நிறுவனம் 98 ரூபாய்க்கு பாக்கெட் இன்டர்நெட் கார்டு வழங்குகிறது. மேலும்,29 ரூபாய்க்கு ஒருவாரம் இந்த சேவையைபயன்பாடுதலம், 14 ரூபாய்க்கு மூன்று நாள் திட்டத்தையும் அறிவித்துள்ளது,5ரூபாய்க்கு ஒருநாள் பாக்கெட் இன்டர்நெட் கார்டு வழங்குகிறது...ஏர்செல் இண்டர்நெட் சேவை தருகிறது....

மொபைல் இண்டர்நெட் பயன்பாடுதவது அதிகரிப்பு..





 இந்தியாவில் உள்ள நகரங்களில் மொபைல் போனில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, சென்ற ஆண்டை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு துவக்கத்தில், 80 லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் மட்டுமே, மொபைல் போனில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தினர். ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது


மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதை கண்டறிந்தோம்' என்றார். ஜி.பி.ஆர்.எஸ்., சேவையுடன் கூடிய மொபைல் போன் முன்பு ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது, அது 2,000 ரூபாய்க்கே கிடைக்கிறது. இது தான், மொபைல் போன் இன்டர்நெட் வாடிக்கையாளர்களின் அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது

Friday, December 3, 2010

மொபைளில் பயன்படுதும் பிரவுசர்கள்..



மொபைளில்  இணைய பக்கங்களை பார்வையிட பயன்படுவது மொபைல் பிரவுசர்கள். மொபைளில் இன்டர்நெட் வசதியை பயன்பாடுதுவதற்கு முக்கியமாக உதவுவது மொபைல் பிரவுசர்கள். அந்த பிரவுசர்கள் சில அதிகம் பயன் தருகிறாது. ஒபேரா மினி பிரவுசர், போல்டு பிரவுசர் ,யுசி வேப் பிரவுசர்.
இந்த பிரவுசர்கள் மொபைல் பயன்பாடுதுவது முலமாக மொபைளில் சிறந்த இணைய பக்கங்களை பார்வையிடலாம். இதனால் அனைத்து பகுதிகளையும் மிக எளிய முறையில் பார்கலாம்.

அதிவேக ஆப்பரா பிரவுசர் (Opera 10) ..



பிரவுசர் போட்டியில் பல்வேறு புதிய வசதிகளுடன் எப்போதும் ஆப்பரா அறிமுகமாகும். இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்ல. ஆனால், இன்று பிரவுசர்களில் அதிகம் பேசப்படும் பல புதிய வசதிகளை ஆப்பரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணைய பக்கங்களில் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பம் போன்ற புதிய வரைமுறைகள் ஆகியவற்றை ஆப்பரா தான் முதலில் கொண்டு வந்தது. இதே போல் இப்போது வெளியிடப்பட்ட பிரவுசரிலும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

ஆப்பரா தனக்கென பல வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் ஆப்பராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஆப்பரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக்கும். இதன் சிறப்புகளை இங்கு பட்டியலிடலாம். முதலில் இதன் வேகத்தைக் கூற வேண்டும். இது செயல்படும் தன்மை முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. சூப்பர் பாஸ்ட் என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன்னால் வந்த பதிப்பு 9.6 பதிப்பைக் காட்டிலும் 40% வேகம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மற்றபடி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பாப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ். ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில் பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் மெயில் வசதி உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் பி.ஓ.பி. 3 மெயில்களை இந்த பிரவுசர் மூலமாகவே கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு.
இதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக் காட்சியினை ஒரு தம்ப்நெயில் படமாக அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு புதிய உத்தி ஆகும். இதற்கு முன் கர்சரை அந்த டேப்பின் மேலாகக் கொண்டு செல்கையில் மட்டும் இந்த படம் தெரியும். மேலும் இவை அமைந்துள்ள டேப் பாரின வலது இடதாக இழுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
அடுத்த சிறப்பு இதன் ஸ்பீட் டயல் வசதியாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத்துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப் நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அப்போது அதனைக் கிளிக் செய்து, தளத்திற்குச் செல்லலாம். இந்த வசதி டிபால்ட்டாகக் கிடைக்கிறது.

இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி இதிலுள்ள இன் – லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குகளை அமைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் புதுமையாக ஆப்பரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும்போது, இந்த தொழில் நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணைய தளங்களை ஆப்பராவின் சர்வர்களில் கம்ப்ரைஸ் செய்து பின் தருகிறது. இதனால் டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும் நமக்குப் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர இணையப் பக்கங்களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆப்பரா தந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவுசரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக்கப்படும். இந்த வசதியை ஆப்பரா பிரவுசர் தரவில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம். வேண்டாதவர்கள் தாராளமாக ஒரு முறை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் இதனையே வைத்துக் கொள்ளலாம்.

மொசில்லா பயர்பாக்ஸ் (latest version) 4.0 Beta 7 / 3.6.12.....


       மொசில்லா பயர்பாக்ஸ் அடுத்த வரவு மொசில்லா பயர்பாக்ஸ்  4.0 Beta 7.
இதன் சோதனை முயற்சி சென்ற செப்டம்பர் மாத மத்தியில் சோதனைத் தொகுப்பு 7ஐ வெளியிட மொஸில்லா திட்டமிட்டது. இந்த சோதனை சரியானதக அமையவில்லை.






              இதில் அனைத்து வசதிகளையும் இணைத்து தர பயர்பாக்ஸ் முயன்று வருகிறது. இப்பொழுது மோஸி்ல்லா புதிதாக முந்தைய பயர்பாக்ஸ் பீட்டா வெர்சன்களில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்தும், பிரவுசரை அதிகமாக மேம்படுத்தியும் ”பயர்பாக்ஸ் 4 பீட்டா 7” வெளியிட்டுள்ளது. பலவிதமான சோதனைகளில் இதன் வேகம் நிருபிக்கப்பட்டுள்ளது.
   முந்தைய பதிப்பான மொசில்லா பயர்பாக்ஸ் 3.6,8. அதிகமாக பயன்களை தருகிறாது. அதைபோன்று மொசில்லா பயர்பாக்ஸ் 4 வெர்சனை தரும் என்று அணைவரின் எதிர்பார்பு.


நெட்ஸ்கேப் நாவிகடோர்......




நெட்ஸ்கேப் நாவிகடோர் ஒரு ஓய்வுபெற்ற உலாவியாகும். இது 1990ல் இருந்து 2002 வரையிலும் மிகும் புகழ் பெற்ற உலாவியாக இருந்தது. இது நெட்ஸ்கேப் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு பொருளாக இருந்தது. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நம்பிக்கை இல்லாத நீதிமன்ற விசாரனைக்கு பிறகு , நெட்ஸ்கேப் நிறவனத்தின் கை ஓங்கியே இருந்தது. பின்னர் நெட்ஸ்கேப் உலவி பல பதிப்புகளில் வெளி வந்தது. பின்னர் எ ஒ அல் ( அமெரிக்க ஆன்லைன்) என்ற நிறுவனம் நெட்ஸ்கேப் நிறுவனத்தை வாங்கியது. அதன் பின்னர் 2008 மார்ச்சில் அந்நிறுவனம் நெட்ஸ்கேப் தயாரிப்பை நிறுத்தியது.


குறிப்பு: நெட்ஸ்கேப் மென்பொருள் மூலம் தான் மொசில்லா பயர்பாக்ஸ் உலாவி கட்டப்பட்டுள்ளது.

இனி செல் போன் வாங்கி அதிகம் நேரம் பேசுங்க....


மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் பேட்டரியை சார்ஜ் செய்வதுதான். எந்த போனாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே, அதன் பேட்டரி பேசுவதற்கு திறன் கொடுக்கும். இப்போது மல்ட்டி மீடியா இயக்கம், இன்டர்நெட் பிரவுசிங் போன்ற வேலைகள் பேட்டரியின் திறனை அதிகம் எடுத்துக் கொள்வதால், பேட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாகின்றனஅமெரிக்க வல்லுநர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கி உள்ளனர்
    ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். காலமைன் லோஷனில் உள்ள ஸிங்க் ஆக்ஸைட் கொண்டு நானோ வயர் பீல்டை உருவாக்கி, அதனை  இரண்டு எலக்ட்ரோடுகளுக்கிடையே அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருக்கிய போது  50 மில்லி வோல்ட் மின்சக்தி உருவாகி இருந்துள்ளது. எப்படி எலக்ட்ரிக் சிக்னல்கள், ஸ்பீக்கர்களில் ஒலியாக வெளியேறுகிறதோ, அதே போல எதிர்வழியில், சரியான வேதியியல் பொருட்களைப் பயன்படுத்திஒலி அலைகளை மின் அலைகளாகவும் மாற்றலாம்இதன் மூலம் மொபைல் போன்களில் பேசப்பேச, அந்த ஒலி அலைகளையே பயன்படுத்தி, அதில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்திடலாம் என்று இந்த விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.

Thursday, December 2, 2010

உங்கள் கணினியை சுத்தம் செய்ய CCleaner Latest version 3.01.1327...




கணினி உபயோகிக்கும் பெரும்பாலானவர்களில் நம் கணினியை சுத்தம் செய்ய Ccleaner உபயோகித்து கொண்டிருக்கும். இது நம் கம்புட்டரில் உள்ள தேவையற்ற பைல்களையும் குப்பை தொட்டியில் உள்ள பைல்களையும் நீக்க பயன்படுகிறது. இணையத்தில் எவ்வளவோ மென்பொருட்கள் இருந்தாலும் நாம் ஏன் இந்த Ccleaner பயன் படுத்துகிறோம்....

நோக்கியா : மொபைல் ஆன்டி வைரஸ்.....






நாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.
எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus மென்பொருட்களை இங்கு பதிவாக கொடுத்து உள்ளேன். இதை பயன் படுத்தி உங்கள் மொபைல் போனை பாதுகாப்பானதாக வைத்து கொள்ளுங்கள்.


NetQin  Mobile Anti Virus

இந்த தளம் ஆன்டி வைரசின் செயல்பாடு மிகவும் சிறந்ததாக உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் மொபைலின் மாடல் எண், மொழி மற்றும் மொபைல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி உங்கள் மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.