Thursday, November 25, 2010

மூன்று சிம் போன்

   


  இரண்டு சிம் இயக்கத்தில் மொபைல் போன்கள் உறுதியாகிவிட்ட நிலையில், தற்போது மூன்று சிம்கள் கொண்ட போன்கள் வரத் தொடங்கி உள்ளன.

   இந்த வரிசையில் வந்துள்ள ஐ க்யூப் ஐ700, மொபைல் போனுக்கான அனைத்து வசதிகளையும் தருவதுடன், சிறந்த செயல்பாட்டினையும் வழங்குகிறது.
  
   இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களையும், ஒரு சி.டி.எம்.ஏ. சிம்மினையும் இணைத்து இயக்கலாம். இதன் பரிமாணங்கள் 118.8 – 46–14.5 மிமீ அளவில் உள்ளன. எடை 100 கிராம். இரண்டு அங்குல திரை தரப்பட்டுள்ளது. 3 மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கான திறன் தரும் வகையில் 1000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது.
 
   டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட கேமரா வீடியோ ரெகார்டிங் செய்கிறது. 3GP, AVI, MPEG4, MP4 ஆகிய பார்மட் வீடியோ பைல்களைக் கையாள்கிறது. MP3, MIDI, AMR, AWB, WAV ஆகிய பார்மட்டுகளில் உள்ள பைல்களை இயக்கும் வகையில் இதன் ஆடியோ பிளேயர் உள்ளது. எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. ஜிபிஆர் எஸ், புளுடூத், யு.எஸ்.பி. மற்றும் வாப் தொழில் நுட்பங்கள் டேட்டா இணைப்பிற்கு வழி அமைக்கின்றன. ஜி.எஸ்.எம். இணைப்பிற்கு 32 எம்பி மெமரியும், சி.டி.எம்.ஏ. வுக்கு 16 எம்பி மெமரியும் தரப்பட்டுள்ளன. 500 முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ்புக், 200 எஸ்.எம்.எஸ்.கள் கொள்ளும் இடம், 4 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவை உள்ளன.

   வழக்கமான கால்குலேட்டர், வேர்ல்ட் கிளாக், அலாரம், இ–புக் ரீடர், காலண்டர், கரன்சி கன்வர்டர், டார்ச் லைட் போன்றவையும் உள்ளன. இந்த மொபைல் போனின் குறியீட்டு விலை ரூ. 4,999.

No comments:

Post a Comment