மொபைல் போன் வாடிக்கையாளர்கள் நம்பரை மாற்றாமல், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு தக்க வகையில், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருகையும் கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலும் புதுப்புது சேவைகளை, சலுகைகளை அறிவித்து வருகின்றது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அதிக சேவை மற்றும் சலுகை வழங்கும் நிறுவனத்திற்கு தாவி விடுகின்றனர். அப்படி தாவும் போது, மொபைல் போன் நம்பரை அடிக்கடி மாற்றும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதைமொபைல் போன் வாடிக்கையாளர்கள் நம்பரை மாற்றாமல், தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம்.
அது Mobile Number Portability எனும் வசதி TROI கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் அதே நம்பரை வைத்துக்கொண்டு வேறு ஒரு மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாறலாம்.
முதலில் நீங்கள் UPC(Unique Porting Code) எனும் நம்பரை பெறவேண்டும். அதற்கு PORT என டைப் செய்து 1900 எனும் எண்ணிற்கு குறுந்தகவல்(SMS) அனுப்ப வேண்டும்.
இப்போது உங்களுக்கு 1901 எனும் எண்ணில் இருந்து எட்டு இலக்க எண் மற்றும் அந்த எண் எந்தத் தேதி வரை செல்லும் எனும் தகவலும் அனுப்பப்படும்.
தங்கள் அருகாமையில் இருக்கும் எந்த ஒரு புதிய மொபைல் சேவை நிறுவன மையம் உள்ளதோ(நீங்கள் விரும்பும் ஏதேனும் Ex: Airtel, Vodafone, Docomo, Reliance) அங்கு செல்லவும்.
அவர்கள் தரும் சேவை மாற்று படிவத்தில் பின் வரும் தகவல்களைக் கொடுக்கவும்.
தற்போதைய மொபைல் எண்.
தற்போதைய மொபைல் சேவை நிறுவனம்.
UPC code
தங்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று, சுய கையோப்பமிட்ட புகைப்படம் மற்றும் கடந்த மாதத்தின் பில்(If it is postpaid). போன்றவற்றையும் கொடுக்கவும்.
அவர்கள் உங்களுக்கு புதிய SIM அட்டை கொடுப்பார்கள். சில நிறுவனம் இந்த புதிய SIM cardக் கென கட்டணம் கேட்டாலும் கேட்பார்கள். (Rs. 50 to Rs. 100)
உங்களின் புதிய நிறுவனம் பழைய நிறுவனத்திற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி நீங்கள் கட்சி மாறி விட்டதாக தகவல் கொடுப்பார்கள். நீங்கள் அந்த பழைய SIM கார்டை எந்தத் தேதி வரை பயன்படுத்தலாம் எனும் தகவலும் உங்களுக்கு கொடுக்கப்படும்.
அதே நாள் அல்லது அடுத்த நாள் இரவு 12 மணி முதல் 5 மணிக்குள் உங்களின் மொபைல் சேவை 2 மணி நேரம் தூண்டிக்கப்படும்.
இப்போது நீங்கள் உங்களின் புதிய மொபைல் நிறுவன வாடிக்கையாளராக மாறிவிட்டீர்கள்.
இந்த சேவை மூலமாக மொபைல் நம்பரை மாற்ற தேவையில்லை....
Hi, But Jan 19th I changed my sim CDMA to GSM in realiance, but till now they were didnot change, if i asked customer care,it will changed itself within soon, right now incoming call also banned by reliance,but outgoing is going, so How can i solved this problem shortly.or where i complain aboout this matter,please help me
ReplyDelete