Tuesday, May 24, 2011

நோக்கியா X1-00

நோக்கியா நிறுவனம் பல கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல் ஒன்றை பட்ஜெட் விலையில் வழங்கியுள்ளது. நோக்கியா X1-00 என அழைக்கப்படும் இந்த போன், இசைப் பிரியர்களின் தேவைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதன் முதலாக மொபைல் போனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ளது. ஹெட்செட் இல்லாம லேயே, இசையைக் கேட்கும் வகையில், பெரிய ஸ்பீக்கர்கள் இதில் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப் படும் அலைவரிசை, நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் படுவதால், அதிக அளவிலான வால்யூமில் பாடலைக் கேட்கும் போதும், துல்லியமான இசை நமக்குக் கிடைக்கிறது.
இதன் திரை 1.8 அங்குல வண்ணத்திரை; 128 x 160 பிக்ஸெல் திறன் கொண்டது. 16 மிமீ தடிமனில், 91 கிராம் எடையுடன் உள்ளது. நியூமெரிக் கீபேடுடன் நேவிகேஷன் கீயும் தரப்பட்டுள்ளது. இசைக்கு மட்டுமென தனியாக மூன்று கீகள் உள்ளன. ஒரே கீயில் மியூசிக் பிளே லிஸ்ட் ஒன்றை உருவாக்கலாம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் இசை கேட்பதை எளிதாக்குகின்றன. ஐந்து தனித்தனி அட்ரஸ் புக்குகளை இதில் அமைத்துக் கொள்ளலாம். மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் மூலம், இதன் மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
இவற்றுடன் பேசும் அலாரம் கடிகாரம், கால்குலேட்டர், டார்ச், ஐந்து கேம்ஸ் ஆகியவை தரப்படுகின்றன. அதிகத் திறனுடன் கூடிய 1320 mAh பேட்டரி வழங்கப் பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, 13 மணி நேரம் பேசலாம்; 38 மணி நேரம் பாடல்களைக் கேட்கலாம்; ஒருமுறை சார்ஜ் செய்தால் 61 நாட்கள் மின்சக்தி தங்கும்.
இந்த போன் ஆரஞ்ச் மற்றும் கடல் நீலத்தில் தயாரிக்கப் பட்டுள்ளது.

Nokia X100 Specifications:
GSM mobile
Weight: 91.1 g
Display: TFT
Colors: 56K colors
Size:
Ringtones: MP3 & Polyphonic
Speaker Phone: Yes
Camera: No
Secondary Camera: No
GPRS : Yes
EDGE: No
Wi-Fi: No
Bluetooth: Yes
USB: Yes
3G: No
Infrared: No
Browser: WAP 2.0/xHTML, HTML
Message: SMS, MMS, Email
Game: Yes
FM and Radio: Stereo FM radio
Colors: Orange, Ocean blue, Dark gray
Battery: Standard battery, Li-Ion 1320 mAh
Special Features:
JAVA: Yes
Stereo FM radio
Dedicated music key
2GB Included Memory Card
Data & Memory Features
Internal: 500 phone entries
External: support up to 16GB, 2GB included microSD
இதன் விலை ரூ.1,699.

No comments:

Post a Comment