Tuesday, August 13, 2013

BLUETOOTH வழியாக நண்பனின் MOBILE PHONE ஐ நீங்கள் பயன்படுத்தலாம்

BLUETOOTH வழியாக நண்பனின் MOBILE PHONE ஐ நீங்கள் பயன்படுத்தலாம்
இந்த MOBILE மென்பொருளின் பயன்பாடு
1) Call from his phone. It includes all call functions like hold etc.
2) Read his messages
3) Read his contacts
4) Change profile
5) Play his ringtone even if phone is on silent
6) Play his songs
7) Restart the phone
8) Switch off the phone
9) Restore factory settings
10) Change ringing volume

இந்த மாதிரியான வேலையை உங்கள் நண்பனின் MOBILE PHONE இல் செய்யலாம் .இதற்கு BLUETOOTH என்று அழைக்கப்பட்டு கம்பியில்லா தொடர்பு தேவை .JAVA SOFTWARE INSTALL செய்ய கூடிய MOBILE HANDSET தேவைப்படும் .இந்த மென்பொருளை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் .இந்த FILE ZIP FORMAT இல் இருக்கும் .இதை EXTRACT செய்து உங்களின் மொபைல் PHONIL INSTALL செய்து  கொள்ளுங்கள் நண்பரே .இதில் 0000 DEVICE CODE ஆக பயன்படுத்தவும் .

Thursday, March 14, 2013

WhatsApp மொன்பொருள்

                                      

உங்கள் மொபைலிருந்து WhatsApp மொன்பொருள் உதவியுடன்
உங்கள் நண்பர்கள்வுடன் அரட்டை அடிக்கலாம்
இதில் உள்ள வசதிகள்:
  • IMAGE
  • VIDEO
  • AUDIO
  • NEW PHOTO
  • NEW VIDEO
  • NEW CLIP
  • LOCATION
  • CONTACT

போன்ற வசதிகள் உள்ளது. இந்த மொன்பொருள் உதவியுடன் இணையதளம் மூலமாக நண்பர்கள் உடன் செய்திகளை உடன்னுகுடன் பகிர்ந்துகொள்ளாம்.Group Message மற்றும் Personal Message அனுப்பும் வசதி உள்ளது.
இந்த மொன்பொருளை instal செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் உள்ள செல்போன்Android,Apple,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam ,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.

Saturday, March 9, 2013

மொபைலிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்ப Bambuser மொன்பொருள்

 
கேமரா வசதியுடைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு bambuser என்ற இணையதளம்வழங்குகிறது.இத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கவும்.Mobile-க்குரிய மென்பொருளை உங்கள் Mobile-ல் Install செய்யவும்.

பிறகு அந்த மென்பொருளை திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும். இதன் மூலம் எந்த நிகழ்ச்சிகளை நம் Mobile-லில் இருந்தே உலகத்திற்குநேரடியாக உங்கள் வீடியோவை ஒளிபரப்பு செய்யலாம்.
மேலும் கணினி Web Camera-விலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். உங்களது ஒளிபரப்பினை உங்கள் Blog-ல் Gadjet-ஆக பொருத்தி உங்கள் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் காட்டலாம் என்பது கூடுதல் வசதி.

தேவை:
            1.உங்கள் செல்பேசியில் அதிவேக இணைய இணைப்பு.
            2.உங்கள் செல்பேசி Android,Apple,bada,meamo 5,Symbian 2nd Edition,Symbian 3rd Edition,Symbian 5th Edition,Symbian^3,Symbiam UIQ3,Windows Mobile போன்ற Applicationகளை Support செய்யும் Mobile-ஆக இருக்க வேண்டும்.
           3.இந்த தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் போனை கிளிக் செய்து உங்களுக்கான Application-ஐ தறவிறக்கி கொள்ளவும்.
           4.பின் அந்த Application-ஐ திறந்து உங்களது ஒளிபரப்பை ஆரம்பிக்கவும்

Friday, March 8, 2013

தொல்லை தரும் அழைப்புகளை நீக்க



மொபைல் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களிலிருந்து நகரம் வரை மொபைல் பரவியுள்ளது. சாதரண மனிதன் கையிலும் மொபைல் உள்ளது. இதனை பொருளாதார வளர்ச்சி எனவும் கூறலாம். 
                                            

Aircel, Airtel,  Vodafone போன்ற பல்வேறு நிறுவனங்களில் இருந்து hello tune Friends Alerts,missed Call Alert போன்றவைகளை ஆக்டிவேட் செய்யுமாறு நாம் பயன்படுத்தும் கம்பெனியிலிருந்து தினமும் பல அழைப்புகள் வரும்.

நாம் சில நேரங்களில் முக்கியமான வேலைகளில் இருக்கும் போது பைக்குளிளோ அல்லது கார்களிளோ சென்று கொன்டிருக்கும் போது இது போன்ற போன் கால்கள் வரும்.எந்த சர்வீஸை ஆக்ட்டிவேட் செய்தோம் என்றே தெரியாது ஆனால் பேலன்ஸ் மட்டும் குறைந்து இருக்கும், என்ன காரணம் என்று புரியாமல் வாடிக்கையாளர் சேவை மையத்தை நாடி காரணம் கேட்டால், நாம் தான் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாக கூறுவார்கள். இது போன்ற போன் அழைப்புகளை  நிறுத்த 
முதலில் National Do Not Call Registry (NDNC Registry) என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.

1.AIRCEL:

ஏர்செல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த"START DND" to "1909" (Toll Free) என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய ”STOP DND” to “1909” (Toll Free).


2.AIRTEL:
ஏர்டெல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 121 என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய "STOP DND" to 121.




3.VODAFONE:

Vodafone-லிருந்து வரும் அழைப்புகளை நீக்க ACT DND to 111என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும்.
 Deactive செய்ய CAN ACT என்ற என்னுக்கு SMS செய்ய வேண்டும்.









4.BSNL:

BSNL-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க, IVRS ஆப்ஷன் மூலகாக நிறுத்த 1909 என்ற என்னுக்கு போன் செய்து Active மற்றும் Deactive செய்ய முடியும்.

SMS மூலமாக நிறுத்த START DND to 1909 மீண்டும் அதனை Deactive செய்யSTOP DND to 1909.




5.Reliance:



Reliance-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.







6.Tata Indicom:
Tata indicom-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க Click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.








7.Tata Docomo:

TATA DOCOMO-ல் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த START DND to 1909 (toll free) தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய STOP DND to 1909(toll free).








8. Idea Callular:
 Idea-வில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 1909 தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய  “STOP DND” to 1909.

Friday, February 15, 2013

மொபைல் போன் டிப்ஸ்

 
 
 
மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.

எல்.ஜி. போன்களின் கோட் எண்கள்
  • போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*#
  • எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*#
  • மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375#
  • மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை அறிய –*#06# இது எந்த போனுக்கும் பொருந்தும்.
  • போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட–2945#*70001#
  • எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 1945#*5101#
  • எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2945#*5101#
  • எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2947#*
நோக்கியா போன்களுக்கான ரகசிய கோட் எண்கள்
  • இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும்.
  • *#7780# –பேக்டரி செட்டிங்ஸை போனில் மீண்டும் அமைக்க
  • *#3283# போன் தயாரான தேதியை அறிந்து கொள்ள
  • *#746025625# – சிம் கடிகாரத்தை நிறுத்த
  • *#67705646# ஆப்பரேட்டர் லோகோவை நிறுத்த
  • *#73# – கேஸ் ஸ்கோர் மற்றும் போன் டைமரை ரீசெட் செய்திட
  • *#0000#–மொபைல் சாப்ட்வேர் பதிப்பு குறித்து அறிய
  • *#92702689# – மொபைல் வாரண்டி குறித்த செட்டிங்ஸ் அறிய (சீரியல் எண், எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி,ரிப்பேர் செய்த தேதி, போன் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாங்கும் போன்ற தகவல்கள்)
சாம்சங் போன்களுக்கான குறியீடு எண்கள்
  • சாம்சங் தந்த பழைய போன்களுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.
  • *#9999# – மொபைல் சாப்ட்வேர் பதிப்பு எண் அறிய
  • #*3849#– சாம்சங் போனை ரீ பூட் செய்திடும்
  • #*2558# – மொபைல் டைமை ஆன் / ஆப் செய்திட
  • #*7337# – அண்மைக் காலத்தில் வெளியான சாம்சங் போன்களை அன்லாக் செய்திட
  • #*4760# – போனின் ஜி.எஸ்.எம். வசதிகளை ஆப் / ஆன் செய்திட
  • *#9998*246# – மெமரி மற்றும் பேட்டரி குறித்த தகவல்களை அறிய
  • *#7465625# –– மொபைலின் லாக் எந்நிலையில் உள்ளது என்று அறிய
  • *#0001# – மொபைலின் சீரியன் எண்ணை அறிய
  • *2767*637# – மொபைலின் கோட் எண்ணை அன்லாக் செய்திட
  • *#8999*636# –மொபைலின் ஸ்டோரேஜ் திறனைக் காட்ட
  • *2562#– சாம்சங் மொபைல் போன்களை ரீ பூட் செய்திட.

Wednesday, July 11, 2012

UC பிரவுசர்





UC BROWSER மிக விரைவில் உலகம் அறியும் வகையில் வளர்ச்சி அடைந்து விட்டனர்.இவர்கள் சீன நிறுவனத்தால் இந்த ப்ரௌசெர் வடிவமைக்க பட்டுள்ளது.இது வரை இந்த UC BROWSER 300 MILLION USER பயன்படுத்துகின்றனர்,150COUNTRIES பயன்பாட்டில் உள்ளது.


இப்போது புதிதாய் 8.3 JAVA VERSION,8.4 SYMBION VERSION,8.0 ANDROID,7.8 WINDOWS AND 7.8 BLACK BERRY வெளியிட்டு உள்ளனர்.முன்பு எல்லாம் ஒபேரா மினி பயன்படுத்திய மொபைல் UC BROWSER பார்க்க முடிகின்றது.என்ன தான் இருந்தாலும் இந்த ப்ரௌசெர் அனைத்திற்கும் ஒரு முன்னோடி ஒபேரா தான்.ஒபேரா RESUME வசதி இல்லாததால் தான் ஒரு குறை இதன் வேகத்திற்கு UC BROWSER ஈடு கொடுக்க இயலாது.
SHORTCUT வசதியை நிறுத்தி விட்டது ஒரு குறை.
இதன் மெனு வசதி பார்க்க அருமை.
டவுன்லோட் செய்யும் FILE RESUME AND PAUSE செய்யும் வசதி.
இப்போது இதில் ஏதேனும் தளத்தில் சென்றால் அந்த தளத்தில் உள்ள கிராபிக்ஸ் செயல்படுவது சாதாரண மொபைல் கூட தெரிகிறது.

                                                     தளத்திற்கான சுட்டி

Friday, September 2, 2011

S.M.S 2.0 இணையதளம்.


மொபைல் வைத்திருப்பவர்கள் அடுத்தவர்களிடம் போனில் பேசுவதை விட குறுஞ்செய்தி என்று சொல்லப்படுகிற எஸ்.எம்.எஸ் அனுப்புவது தான் மிக அதிகமாக உள்ளது.காரணம் அந்தளவுக்கு எஸ்.எம்.எஸ்  அனுப்புவது மொபைல் உபயோகிப்பாளர்களிடம் பிரபலமாக உள்ளது.
நாம் பிசியான நேரங்களில் இருப்பதை நம்மை தொடர்பு கொள்பவருக்கு நாசுக்காக தெரிவிக்க இந்த குறுஞ் செய்தி சேவை உதவி செய்கிறது.

சில பேர்களிடம் நேரில் தெரிவிக்க முடியாத பல விஷயங்களை மொபைல் மூலம் தெரிவிக்க இந்த எஸ்.எம்.எஸ் சேவை உதவுகிறது. குறிப்பாக காதலிப்பவர்கள் மொபைலில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் மூலமாக பேசிக்கொள்வதுதான் மிகமிக அதிகம்.இதற்கு காரணம் வேறு சொல்ல வேண்டுமா என்ன?

இப்படி மனித வாழ்க்கையில் கூடவே வரும், மௌனமாய் சாகசம் செய்யும் ஒருமனிதனைப் போல நம்மை பின் தொடர்வதுதான் மொபைல் எஸ்.எம்.எஸ் சேவை.அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் அனுபவத்தை நாம் இன்னும் புதுமையாக மேற்கொள்ள உதவுவது தான் Affle Limited நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும்  S.M.S 2.0

அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

குறைந்தபட்சம் ஜி.பி.ஆர்.எஸ் வசதி கொண்ட கலர் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு கூட இந்த அப்ளிகேஷன் ஒரு புதுமையான எஸ்.எம்.எஸ் அனுப்பும் அனுபவத்தை தரும் என்றால் அது மிகையாகாது. காரணம் பொதுவாக நாம் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும்போது மிகவும் சாதாரணமாக லெட்டர்களை மட்டுமே டைப் செய்து அனுப்புவோம்.ஆனால் இந்த அப்ளிகேஷனை நாம் நமது மொபைலில் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட வசதிகளை பெறலாம்.

1. லெட்டர்களை (TEXT) கலரில் டைப் செய்து அனுப்பலாம்.

2. உங்கள் குறுஞ்செய்தியை பெறுபவரின் மூடுக்கேற்ற மாதிரியான, அல்லது நீங்கள் அனுப்பும் செய்தியின் தன்மைக்கேற்ற 'Smileys' களை இணைத்து அனுப்பலாம்.

3. ஒவ்வொரு முறையும் குறுஞ்செய்தி அனுப்பும்போது அதன் பின்பக்கத்தின் வண்ணத்தை (BACKGROUND COLOUR) மாற்றி அனுப்பலாம்.

4. நீங்கள் நினைக்கும் நேரத்தில் தானாக எஸ்.எம்.எஸ் செல்லும்படி செட் செய்து அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.அதேபோல உங்கள் குறுஞ்செய்தியை இமெயிலாக மாற்றி அனுப்பலாம்.

5. இதில் இருக்கும் ஸர்ச் (SEARCH) வசதி மூலம் நாம் இணைய தேடல்,நீங்கள் வைத்திருக்கும் ஆபரேட்டர் தரும் வசதிகளை தேடும் வசதி,நகரத்தை தேடும் வசதி,வேலை தேடுதல்,வீட்டுமனை தேடுதல் போன்ற சேவைகளை மேற் கொள்ள முடியும்.
                                                         
பின்குறிப்பு : இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க இலவசம் தான். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் லைவ் போர்ட்டலுக்கு சென்று அங்கேயும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நோக்கியா, சோனிஎரிக்சன்,சாம்சங் கம்பெனிகளின் பெரும்பாலான மாடல்களை இந்த அப்ளிகேஷன் ஆதரிக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் எஸ்.எம்.எஸ் பக்கத்திரையில் சினிமா, விளையாட்டு,அரசியல்,கல்வி,பேஷன்,வணிகம் சம்பந்தமான அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக படித்து மகிழலாம்.

Tuesday, July 19, 2011

மொபைல் போன் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்!

மொபைல்ல மிகமிக முக்கியமான பிரச்சனையே அதோட பேட்டரிதிறன் தான். நாம எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலோட பேட்டரியோட ஆயுள்காலம் இருக்கு.
சரி இங்க மொபைலில் பேட்டரியை எப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை பார்க்கலாம்.
நீங்க கடையிலே போயி புதுசா ஒரு மொபைல் வாங்கப்போறீங்கன்னா முதல்ல நீங்க எந்த மாடல் மொபைலை எடுத்தாலும் அதோட பேட்டரி திறன் எவ்ளோன்னு கண்டிப்பா பாருங்க, 2” அங்குல திரை உள்ள எல்லா மல்டிமீடியா வசதிகளும் இருக்குற ஒரு மொபைலுக்கு குறைஞ்சது 1000 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கான்னு செக் பண்ணிக்கிறது ரொம்ப முக்கியம். இந்த ‘அளவுகுறியீடு’ பேட்டரியோட பின்பக்கத்துல கண்டிப்பா போட்டுருப்பாங்க. அதுல பாத்து நீங்க தெரிஞ்சிக்கலாம். ஏன்னா குறைஞ்சது இந்த அளவுல பேட்டரிதிறன் இருந்தா தான் நீங்க பாட்டு கேக்குறது, இன்டர்நெட்ல பண்ணுறது,வீடியோ பாக்குறது,கேம்ஸ் விளையாடுறது.வை-பை மூலமா இன்டர்நெட் கனக்ட் பண்ணி பாக்குறதுன்னு மொபைல்ல இருக்குற எல்லா வசதிகளையும் ரொம்ப நேரம் பயன்படுத்த முடியும்.

இப்படி புதுசா வாங்குற மொபைலை வாங்குன உடனே சிம்மை போட்டு பயன்படுத்த கூடாது.மொதல்ல மொபைலை ஆப் பண்ணிட்டு 8 மணி நேரம் சார்ஜ் ஏத்தனும். ஒரு ரெண்டுமணி நேரம் ஆன உடனே உங்க மொபைல்ல ‘பேட்டரி புல்’லுன்னு காட்டும்.அப்படி காட்டினாலும் நீங்க நிப்பாட்டிடாதீங்க புதுபோனுக்கு முதல் தடவை சார்ஜ் ஏத்துறப்போ கண்டிப்பா 8 மணி நேரம் ஏத்தனும்.
அடுத்தடுத்த முறை நீங்க சார்ஜ் ஏத்தும் போது ‘பேட்டரி புல்’லுன்னு காட்டினா உடனே சார்ஜ் ஏத்துறதை நிப்பாட்டிடனும்.இல்லேன்னா பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காது.
உங்க மொபைல்ல எந்த நேரமும் ப்ளுடூத்தை ஆன் பண்ணி வைக்காதீங்க,இதனால உங்க பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போயிடும்.
அதேமாதிரி ‘வை-பை’யையும் எந்த நேரமும் ஆன் பண்ணி வைக்க கூடாது.
உங்க மொபைலோட திரைவெளிச்சத்தோட(screen brighness) அளவை மொபைல்ல முன்னிருப்பா (default) என்ன அளவுல இருக்கோ அந்த அளவுலேயே வெச்சிருங்க. வெளிச்சத்தை அதிகப்படுத்தினாலும் சீக்கிரம் பேட்டரி தீர்ந்து போயிடும்.

மொபைல்ல பேட்டரியோட அளவு முழுசா தீர்ந்த பொறவு தான் நீங்க சார்ஜ் ஏத்தனும். பாதி,இல்லேன்னா கால்வாசி அளவுல இருக்கும் போது சார்ஜ் ஏத்தக் கூடாது.இதனாலேயும் பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காம போயிடும்.
மொபைலோட திரையில் வீடியோ ரிங்டோன்,லைவ் வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர், அதிக பிக்சல் உள்ள புகைப்படங்கள் இவற்றை எல்லாம் பயன்படுத்தக் கூடாது அப்படி பண்ணினாலும் சார்ஜ் சீக்கிரமே தீர்ந்து போயிடும்.

நாம ஒவ்வொருத்தரும் புதுசுபுதுசா ரிங்டோன் வெச்சிக்க ஆசைப்பட்டு விதவிதமா MP3 பாடல்களை ரிங்டோனா வெச்சிருப்போம்.இதனாலேயும் சார்ஜ் சீக்கிரம் போயிடும்.அப்படி வெச்சாலும் கூட அரை அல்லது ஒருநிமிஷத்துக்கு கட் பண்ணின பாடல்களை மட்டும் ரிங்டோனா வெச்சிக்கங்க, ஒருமுழு பாடலை ரிங்டோனா வைக்க வேணாம்.

எப்ப பாத்தாலும் மொபைலை ‘சைலன்ட்’ல வெக்காதீங்க,அதே மாதிரி ரிங்டோன் ஒலியோட அளவையும் குறைச்சி வையுங்க.

நம்மல்ல நெறைய பேர் நைட்டு தூங்கப்போறப்போ மொபைலை சார்ஜ்ல போட்டுட்டு மறுநாள் தூங்கி எந்திருக்கும் போதுதான் அதை பிளக்ல இருந்து எடுப்போம் இது ரோம ரொம்ப தப்பு,இப்படி பண்ணினா வெகு சீக்கிரத்துல பேட்டரி சூடாகி உப்பி போயி வேலை செய்யாம போயிடும்.
இன்டர்நெட் யூஸ் பண்ணுற நேரம்,மெயில் செக் பண்ணுற நேரம் போக மத்த நேரங்கள்ல மொபைல்ல இன்டர்நெட் உபயோகத்தை நிப்பாட்டி வையுங்க.இதன் மூலமாவும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகும்.

அதிக வெப்பமுள்ள இடங்கள்ல பேட்டரியை வைக்க வேணாம்,அடிக்கடி மொபைல்ல பேட்டரியை கழட்டி கழட்டி மாட்டக்கூடாது.
கூடுமானவரைக்கும் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் விக்குற ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே மொபைல்ல யூஸ் பண்ணுங்க.காசுக்கு ஆசைப்பட்டு எந்த காரணத்தை கொண்டும் போலியான அதேமாதிரி சார்ஜரும் ஒரிஜினலை தான் யூஸ் பண்ணனும்.இப்படிப்பட்ட சின்னசின்ன விஷயங்கள்ல கவனமா இருந்தாலே போதும்.உங்க மொபைலோட பேட்டரி நீண்ட நாட்களுக்கு நல்லா உழைக்கும.

Wednesday, July 13, 2011

scrapii வலைத்தளம் .

வலைதளங்களில் இருந்து நாம் புகைப்படங்களை டவுன்லோட் செய்வதுண்டு. சிலர் கணிணிக்கு வால்பேப்பர் டவுன்லோட் செய்வார்கள். மேலும் சிலர் நடிகர்,நடிகைகள் மற்றும் பிடித்த கார், இயற்கைகாட்சிகளின் புகைப்படங்களை டவுன்லோட் செய்வார்கள். மேற்கண்ட வகை வகையான புகைபடங்களை டவுன்லோட் செய்ய பல வலைதளங்கள் உள்ளன. இந்த வலைதளங்களில் இருந்து புகைபடங்களை ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்ய கடினமாக இருக்கலாம்.
வலைதளங்களில் இருக்கும் புகைப்படங்களை டவுன்லோட் செய்ய பல மென்பொருள்கள் உண்டு. ஆனால் மென்பொருள் இல்லாமல் டவுன்லோட் செய்ய scrapii என்ற தளம் உதவுகிறது. இந்த தளத்தை பயன்படுத்தி புகைப்படத்தை டவுன்லோட் செய்வதை பார்க்கலாம். இந்த வலைதளத்திற்கு சென்ற பின் நீங்கள் புகைப்படங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய தளத்தின் சுட்டியை கொடுக்கவும்.

சுட்டியை கொடுத்த பின் Scrape என்ற பட்டனை கிளிக் செய்தால் சில நிமிடங்களுக்கு பின் நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள அனைத்து புகைப்படங்களும் மொத்தமாக Zip கோப்பாக டவுன்லோட் செய்ய கிடைக்கும்.
பின் டவுன்லோட் செய்த zip கோப்பை extract செய்தால் வலைதளத்தில் உள்ள அனைத்து புகைப்படங்களும் கிடைக்கும்.

வலைத்தளம் சுட்டி
மென்பொருள் இல்லாமல் டவுன்லோட் செய்ய விரும்புவர்களுக்கு இந்த வலைத்தளம் மிகவும் உதவியாக இருக்கும்.

Tuesday, July 12, 2011

இலவசமாக நோக்கியா ovi மப்ஸ்

நோக்கியா நிறுவனம் அளிக்கும் இலவச சேவையில் ovi maps உம் ஒன்று .ஓவி ம்பஸ் இன் மூலம் நீங்கள் புதிதாக ஓர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த இடத்தை பற்றிய map ஐ (ovi maps மூலம் எளிதாக செய்யலாம் ) டவுன்லோட் செய்து .உங்கள் நோக்கியா செல்பேசியில் பதிந்து விடவேண்டும் .பின்பு அந்த இடத்திற்குச் சென்றவுடன் அங்கு இருக்கும் பிரபல்யமான இடங்கள் , தெருக்கள் போன்றவற்றை மிக எளிதாக இந்த மென்பொருள் மூலம் கண்டறியலாம் .2d , மற்றும் 3d வசதி இருப்பதால் இதை உபயோகிப்பது மிக மிக எளிது .ஐரோப்பியா , மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இந்த சேவை தானாகவே வேலை செய்யும் .இந்தியா மற்றும் இலங்கையில் உங்கள் service provider (இதை எவ்வாறு தமிழில் கூறுவது என்று தெரியவில்லை ) ஐ பொறுத்து வேலை செய்யும் .

இதை உங்கள் கணினியில் நிறுவ இங்கே செல்லவும் .மேலும் செல்பேசிக்கான பல இலவச மென்பொருட்களை பெற இங்கே செல்லவும்.

Wednesday, June 29, 2011

Java Mobile Antivirus.


                                               

Java உள்ளடக்கப்பட்ட கைத்தொலைபேசிகளினை வைரஸ் தாக்கத்திலிருந்து தடுப்பதற்கான சிறந்த வைரஸ் தடுப்பு புரோகிராம். கீழே இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
Download Java Mobile Antivirus

தொலைபேசியில் இணைய தளம் பாண்ட்வித்தை அளக்க ஒரு எளிய மென்பொருள்


மொபைல் தொலைபேசியின் அண்மை கால தொழில்நுட்ப வளர்ச்சி மிக அதிகம். தற்போது GPRS மற்றும் 3G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமானதால், சமிபகாலத்தில் மக்கள் மொபைலில் இணைய தளங்களை உபயோகிப்பது அதிகம் ஆகிவிட்டது.

இந்த சேவையை வழங்கிவரும் மொபைல் நிறுவனங்கள், இதன் பயன்பாட்டில் சில குறிபிட்ட அளவுமாட்டும் இலவசமாக வழங்கி வருகிறது அதற்கு பின் உபயோகிக்க படும் பாண்ட்வித் அளவிற்க்கு ஏற்ப பணம் வசூலிக்க படும்.
இந்த அளவை தெரியாமல் பலர் அளவுக்கு அதிகமாக உபயோகித்து விடுவார்கள். இதை கட்டுபடுத்த, நாம் உபயோகிக்கும் பாண்ட்விட்த் அளவை அறிந்து கொல்ல ஒரு எளிய மொபைல் தொலைபேசிக்கு ஆனா மென்பொருள் இதோ.

Data Quota என்ற இந்த சிறய மென்பொருள் பாண்ட்வித்தை கண்காணிக்க சிறந்த வழி. Data Quota ஒரு சிம்பியன்( Symbian ) வகை மொபைல் தொலைபேசிகளுக்கு ஏற்றது. இந்த மென்பொருள் நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது பின்புறத்தில் இயங்ககூடியது. இது வரை படம்  (Graphical ) வடிவில் காட்டகூடியது.


Quota – குறிப்பிட்ட பாண்ட்விட்த் அளவை நீங்கலே
ஒவ்வொரு மாதமும் நிர்ணயத்துகொள்ள முடியும்.
Billing Day – மாத மாதத்திற்கு புதுப்பித்தல் நாளை
நிர்ணயத்துகொடால், குறிபிட்ட காலத்தில் மீதி உள்ள
நாட்களை காட்சியாக அறிவிக்கும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து எடுக்க
இங்கே அழுத்து - Data Quota

Sunday, June 19, 2011

இணையதளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான விளையாட்டுகள் தரவிறக்கும் தளம்




மொபைல்களில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது? ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் தனக்கென ஒரு கடையை வைத்துள்ளது. இவர்களின் இணையதளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.

1. GetJar
மொபைல் பயன்பாடுகளுக்குச் சிறந்த தளமாகும். இணைய உலவிகள், மென்பொருள்கள், விளையாட்டுகள், ஆபிஸ் பயன்பாடுகள், PDF போன்ற பயன்பாடுகளை தலைப்பு வாரியாக வைத்துள்ளார்கள். இதில் ஆப்பிள் ஐபேடுக்கும் கூட மென்பொருள்களைப் பெற முடியும். எளிமையான பயன்பாடுகள் முதற்கொண்டு Google map, Google Earth போன்ற அட்வான்ஸ்டு மென்பொருள்களையும் இலவசமாக தரவிறக்கலாம்.
http://getjar.com
2.Mobile9.com
இந்த தளத்தில் சாதாரண மொபைலில் இருந்து எல்லாவகையான மொபைல்க்கும்.பயன்பாடுகளைப் பெற முடியும். இத்தளத்தில் லட்சக்கணக்கான மொபைலுக்கான மென்பொருள்கள் உள்ளன. மேலும் புதிது புதிதாக பயன்பாடுகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொபைலுக்குத் தேவையான Themes, Ringtones, Wallpapers, Videos, Screensavers, Java Softwares, Games என அனைத்துமே ஒரே இடத்தில் இருக்கின்றன. போனின் மாடலைக் குறிப்பிட்டால் போதும் அனைத்து வகையான பயன்பாடுகளும் ஒடிவரும்.
http://mobile9.com
3.Nokia OVI Store
இது நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள் இத்தளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும். இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும். நீங்கள் நோக்கியா மொபைலிலிருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
http://store.ovi.com
4. Android Market
கூகிளின் மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம் இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும் லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன. பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விசயம் நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும். வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது.
http://market.android.com

5. Microsoft Windows Mobile OS
மைக்ரோசாப்டின் மொபைல் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர். ஏனெனில் முழுதும் விண்டொஸ் இருக்கும் கணிணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை நிறுவும் போது கணிணியிலிருந்து தான் மொபைலில் நிறுவ முடியும். சில மென்பொருள்களை கணிணியில் நிறுவி கணிணி வழியாக மொபைல் அமைப்புகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக Registry Editor.
மொபைல் உதாரணங்கள் – Samsung Omnia Series, Sony Ericson Xperia X1
http://marketplace.windowsphone.com
6.Apple Store
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேடு பயன்படுத்துவர்கள் ஆப்பிளின் ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://store.apple.com/us
இதைத் தவிர மற்றவற்றைப் பயன்படுத்தி உள்ளதால் இதைக் கடைசியாக எழுதியுள்ளேன். ஐபோன் ஒன்று கூட சிக்கவில்லை இதுவரை. மற்றவை எல்லாம் நான் பயன்படுத்திப் பார்த்த அனுபவத்தில் குறிப்பிட்டுள்ளேன்.மொபைல் பயன்படுத்துபவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துகளைக் கூறவும்

Friday, June 17, 2011

phonecurry இணையதளங்கள்.

புதிதாக செல்போன் வாங்கச்சென்றால் எந்த மாதிரியை செல்போன் வாங்குவது என்ற குழப்பம் நமக்கு வருவது சகஜம் .அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவன‌ங்கள் அறிமுகமாகி புதிய போன்களை சந்தையில் நிறைத்து வருகின்றன. எனவே புதிதாக போன் வாங்கச்செல்லும் போது எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம்.
இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு பெற பூர்விகாவோ யூனிவர்செலோ தேடி போவதற்கு முன் இண்டெர்நெட்டில் பல்வேறு போன்களை பார்த்து அவற்றின் விலை மற்றும் அம்சங்களை அலசிப்பார்த்து கொள்ளலாம். இதைவிட‌ சுல‌ப‌மான‌ வ‌ழி ஒன்று இருக்கிற‌து.அது நேராக‌ போன்க‌ரி இனைய த‌ள‌த்திற்கு செல்வ‌து தான்.இந்த‌ த‌ள‌ம் உங்களுக்கு ஏற்ற‌ புதிய‌ போன் எது என்று தேர்வு செய்து கொள்ள‌ வ‌ழி காட்டுகிற‌து. இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்த‌தும் உங்க‌ள்: ப‌ட்ஜெட்டை குறிப்பிட்டு விட்டு,போனில் நீங்க‌ள் எதிர்பார்க்கும் அம்ச‌ங்க‌ள் எவை என்ப‌தை குறிப்பிட‌ வேண்டும்.எல்லாவ‌ற்றுக்கும் த‌னித்த‌னி க‌ட்ட‌ங்க‌ள் இருப்ப‌தால் அவ‌ற்றில் இருந்து தேர்வு செய்தாலே போதும்.

                             

ட‌ச் ஸ்கிரீன் தேவையா,மீயூசிக் பிலேய‌ர் தேவையா,கீபோர்டு எப்ப‌டி இருக்க‌ வெண்டும் என்று குறிப்பிட்ட‌ பின் கிளிக் செய்தால் பொருத்த‌மான‌ போனை அடையாள‌ம் காட்டும். அத‌ன் பிற‌கு அந்த‌ குறிப்பிட்ட‌ ர‌க‌ம் ப‌ற்றி ப‌டித்துவிட்டு அதே போன்ற‌ ம‌ற்ற‌ போன்க‌ளோடு அத‌ன் விலையையும் ஒப்பிட்டு பார்த்து எது திருப்ப்தி அளிக்கிற‌தோ அத‌னை தேர்வு செய்ய‌லாம்.
மிக‌வும் எளிமையான‌ நான்கே ப‌டிக‌ளில் பொருத்த‌மான‌ போனை தேர்வு செய்து விட‌லாம் என்று போன்க‌ரி உறுதி அளிக்கிற‌து.

                                     

இணையதள முகவரி சுட்டி
GSM போன்க‌ள் ம‌ட்டுமே இந்த‌ த‌ள‌த்தில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌. CDMA போன்க‌ள் இல்லை. அதே போல‌ இர‌ண்டு ஆண்டுக்கு மேல் ப‌ழ‌மையான‌ போன்க‌ள் இல்லை.அந்த‌ போன்க‌ள் காலாவ‌தியாகி போய் க‌டைக‌ளில் இல்லாத‌ நிலையும் இருக்க‌லாம் என்ப‌தால் இப்ப‌டியாம். நேராக‌ குறிப்பிட்ட‌ ர‌க‌ போன் பெய‌ரை குறிப்பிட்டு அத‌னை ப‌ற்றியும் தெரிந்து கொள்ளூ வ‌ச‌தியும் உள்ள‌து.போன்க‌ளின் ப‌ட்டிய‌லை கிளீக் செய்து அவை பற்றியும் ஆர‌ய்ந்து பார்க்க‌லாம்.
இந்திய‌ நுக‌ர்வோருக்கு செல்போன் வாங்க‌ வ‌ழி காட்டும் நோக்கில் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ இந்த‌ த‌ள‌ம் த‌ன்னைப்ப‌ற்றி குறிபிடுகிற‌து.
ம‌ற்ற‌ போன் த‌ள‌ங்க‌ளை விட‌ எளிமையான‌து.சிற‌ந்த‌தும் கூட‌. நான் ட்ரை பண்ணி பார்த்தேன் நல்லாருக்கு .! நீங்களும் பார்த்துட்டு சொல்லுங்க