Wednesday, July 13, 2011

scrapii வலைத்தளம் .

வலைதளங்களில் இருந்து நாம் புகைப்படங்களை டவுன்லோட் செய்வதுண்டு. சிலர் கணிணிக்கு வால்பேப்பர் டவுன்லோட் செய்வார்கள். மேலும் சிலர் நடிகர்,நடிகைகள் மற்றும் பிடித்த கார், இயற்கைகாட்சிகளின் புகைப்படங்களை டவுன்லோட் செய்வார்கள். மேற்கண்ட வகை வகையான புகைபடங்களை டவுன்லோட் செய்ய பல வலைதளங்கள் உள்ளன. இந்த வலைதளங்களில் இருந்து புகைபடங்களை ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்ய கடினமாக இருக்கலாம்.
வலைதளங்களில் இருக்கும் புகைப்படங்களை டவுன்லோட் செய்ய பல மென்பொருள்கள் உண்டு. ஆனால் மென்பொருள் இல்லாமல் டவுன்லோட் செய்ய scrapii என்ற தளம் உதவுகிறது. இந்த தளத்தை பயன்படுத்தி புகைப்படத்தை டவுன்லோட் செய்வதை பார்க்கலாம். இந்த வலைதளத்திற்கு சென்ற பின் நீங்கள் புகைப்படங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய தளத்தின் சுட்டியை கொடுக்கவும்.

சுட்டியை கொடுத்த பின் Scrape என்ற பட்டனை கிளிக் செய்தால் சில நிமிடங்களுக்கு பின் நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள அனைத்து புகைப்படங்களும் மொத்தமாக Zip கோப்பாக டவுன்லோட் செய்ய கிடைக்கும்.
பின் டவுன்லோட் செய்த zip கோப்பை extract செய்தால் வலைதளத்தில் உள்ள அனைத்து புகைப்படங்களும் கிடைக்கும்.

வலைத்தளம் சுட்டி
மென்பொருள் இல்லாமல் டவுன்லோட் செய்ய விரும்புவர்களுக்கு இந்த வலைத்தளம் மிகவும் உதவியாக இருக்கும்.

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி... யூஸ் பண்ணி பாக்கறேன்.

    ReplyDelete