Sunday, December 26, 2010

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்..

 
 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுச் சலுகையாக ரூ 499-க்கு வரையறையற்ற பிராட்பேண்ட் வசதியை அளிக்கிறது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் பொதுமேலாளர் டி நடராஜன் கூறுகையில், "ஏற்கெனவே ஹோம் 625 என்ற திட்டத்தின் கீழ் வரையறையற்ற பிராட்பேண்ட் வசதி தந்து வருகிறது பிஎஸ்என்எல். இதில் லேண்ட்லைன் போனுக்கு கட்டணம் கிடையாது. 100 இலவச கால்கள் உண்டு.

இப்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகையாக ரூ 499-க்கு பிராட்பேண்ட் இணைப்பு தர முடிவு செய்துள்ளது பிஎஸ்என்எல். இந்த இரு திட்டங்களிலுமே மோடம் பொருத்த கட்டணம் இல்லை. 100 இலவச கால்கள் உண்டு"